(அக்கரைப்பற்று வம்மியடி புஹாரி)                                     

கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ எல் தவம் தனது உத்தியோக முகநூலில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் 28/02/2016 அன்று “சேறுபூசும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் நெஞ்சி நிமிர்த்தி நின்று முகம் கொடுத்துள்ளனர்” என்ற தலைப்பில் ஒரு பதிவொன்றை போட்டிருந்தார்.

அண்மையில் ஆங்கில ஊடகமொன்றின் தலைப்புச் செய்தியாக வெளிவந்த ஹக்கீம் தொடர்பான விசாரணை குறித்தே மு கா உறுப்பினரான தவம் முண்டியடித்துக்கொண்டு இந்த முக நூல் பதிவை மேற்கொண்டிருக்கின்றார்.

பாரிய ஊழல், மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜானாதிபதி ஆணைக்குழு நீதியமைச்சராக இருந்த ஹக்கீமை அவரது அமைச்சில் இடம்பெற்ற பாரிய செலவீனங்கள் தொடர்பாகவே இந்த விசாரணையை அவர் விரைவில் எதிர்நோக்க வேண்டி வரும் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை தமிழ் இணைய தளங்களும் ‘லேட்’ஆக என்றாலும் ‘லேட்டஸ்ட்’ஆக வெளியிட்டு தமிழ் வாசகர்களுக்கு அதனை தெரியப்படுத்தி இருந்தது.

எனினும்  இந்தச் செய்தியை இணையதளத்தில் பார்த்தோ என்னவோ தவம் மு கா தலைவரிடம் ‘புள்ளி’ போடுவதற்காக தனது பதிவில் இவ்வாறான கருத்தை மேற்கொண்டிருக்கலாம். எனினும் தவத்தைப்பொறுத்த வரையில் இவ்வாறான கருத்தைத் தெரிவிப்பது நகைப்புக்குறியதே. ஏனெனில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுடன் இணைந்து அக்கரைப்பற்றில் தவம் ‘கற்றுக்குட்டி’ அரசியல் நடத்திய போது ‘இப்தார்’ ஒன்றுக்கு அக்கரைப்பற்றுக்கு வந்த மு கா தலைவரின் முகத்திலும் கஞ்சியை வீசியவரும் இந்தத் தவமே!

ஹக்கீமின் முகத்தில், தவம் அப்போது கஞ்சியை வீசும்போதும் மு கா தலைவர் நெஞ்சை நிமிர்த்தி நின்று கஞ்சிக்கு முகத்தைக் கொடுத்தார் என்பதை தவத்திற்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *