மஹிந்த ராஜபக்சக்கள் குடும்பவாதத்தை இன்னமும் கைவிடவில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…,

கூட்டு எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட உள்ள கட்சியின் தலைவர் ராஜபக்சக்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டின் ஊடாக மீளவும் குடும்பவாதம் தலைதூக்கியுள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக குடும்ப அரசியலை முன்னெடுக்கவே மஹிந்த தரப்பு விரும்புகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி குடும்ப அரசியல் நிராகரிக்கப்பட்டது.

இனியும் நாட்டில் குடும்பவாத அரசியலுக்கு இடமில்லை. பெசில் ராஜபக்ச கட்சிகளை உடைத்தலில் ஈடுபட்டவரே தவிர, கட்சிகளை உருவாக்கியவர் கிடையாது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய போதிலும், நாமல் ராஜபக்சவே விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவிததுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *