(நாச்சியாதீவு பர்வீன்)
பிரபல எழுத்தாளரும்,யாத்ரா கவிதை இதழின் பிரதம ஆசிரியரும்,இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும்,ஒலி,ஒளிபரப்பாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த  சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.03.2016 அன்று கொழும்பு – 10, தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில்         பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும் கௌரவ அதிதியாகக் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.முஜீபுர் ரஹ்மானும் கலந்து கொள்ளவுள்ளனர்.121b8298-7538-40a6-9a4f-e8a8bdfacf63

நூல் பற்றிய கருத்துரைகளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மல்லியப்பு சந்தி திலகரும் எழுத்தாளரும் கவிஞருமான லறீனா அப்துல் ஹக் அவர்களும் வழங்கவுள்ளனர்.

முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *