ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற் பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 08 ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், ஜம்மியத்துல் உலமா சபையின் நியூஸ் லெட்டர் வெளியீட்டின் ஆசிரியர் (Editor of News Letter) மௌலவி டி. ஹைதர் அலி அவர்களினால் “அனைத்து ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்” என்ற தலைப்பில் அல்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டப்படுகின்றனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *