(செட்டிகுளம் சர்ஜான்)
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான  கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீட்டு  விழா நேற்று முன் தினம் (27-02-2016)  பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில்  மன்னார் ஜூலி ஹோட்டலில் நடைபெற்றது.

விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள விளக்கேற்றல் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு  நிகழ்வு ஆரம்பமானதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.e89ced06-6c3a-4211-b3d1-8712d3400a25
குறித்த நூலினை பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டு வைத்ததுடன் விருந்தினர்கள் உறையும் இடம்பெற்றன.f06cb007-cdb5-4adb-a85b-1ea26f18118d
நூலாய்வினை  கவிஞர்.வே.முல்லைத்தீபன் வழங்கியதுடன் ஏற்புரையில் கவிஞர் தான் கடந்து வந்த பாதையின் வலிகளை  தெளிவுபடுத்தியதுடன் அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றியையும் தெரிவித்தார்.6ecae85a-237c-4e76-b7fc-1ac38d108969
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டதுடன் விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் ,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டபிரதேச செயலாளர்  கே.எஸ்.வசந்த குமார் இயக்குநர் கலையருவி அருட்பணி தமிழ் நேசன் அடிகளார்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ.நோகராதலிங்கம்
கௌரவ விருந்தினர்களாக வைத்தியகலாநிதி.எஸ்.செல்வமகேந்திரன், வைத்தியகலாநிதி.செ.லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில்  கிளிநொச்சி-முல்லைத்தீவு-அம்பாறை-திருகோணமலை-மட்டக்களப்பு-போன்ற மாவட்டங்களில் இருந்து கவிஞர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *