பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சீ.சீ.டி.வி. காட்சிகள் கனடாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு அனுப்ப முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.

தெளிவில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படும் காட்சிகள் தொடர்பில் அறிக்கையொன்றை குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து நேரடியாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பொலிஸார் ஊடாக விடுத்த வேண்டுகோளின் பிரதிபலனாக இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் திணைக்களம் நீதிமன்றத்திடம் கூறியுள்ளது.

இதேவேளை, குறித்த சீ.சீ.டி.வி. காட்சிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச உதவியை பெற்றுக் கொள்ள வேண்டி வரும் என இதற்கு முன்னர் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *