(அக்கரையூர் அப்துல் ஜப்பார்)

தனித்துவத் தலைவர் அஷ்-ஷஹீத் அஷ்ரஃப் அவர்களின் வழிநடத்தலில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் முகவரியை நிரூபித்தோம்.

ஆயுதங்களோ, வன்முறையோ இன்றி நமது மிகக்குறைந்த ஒற்றுமையைக் காட்டி இலங்கை முஸ்லிம்களின் கௌரவத்தையும், தேசிய இன அந்தஸ்தையும் நிறுவிக்காட்டினோம். தனித்துவமான பிரதிநிதித்துவ அரசியலில் 27 வருடங்கள் கழிந்துள்ளன. இக்கால இடைவெளியில் உள்ளுராட்சி, மாகாண, பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் பலவற்றில் பங்குபற்றி ஒற்றுமையின் பெறுபேறுகளை வெற்றிகளாக வெளிக்காட்டினோம். நிறுவுனர் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் 1988-2000 வரையான 12 வருடங்கள் தேர்தல்களைச் சந்தித்து சாதனைகள் புரிந்தோம். இதுவே நமது தனித்துவ அரசியலில் பொற்காலமாகும். இதுவே தேசிய அரசியல் அரங்கில் முஸ்லிம்களுக்கு நம்பகத்தன்மை மேலோங்கி இருந்த காலகட்டமாகும். றவூப் ஹக்கீமின் தலைமையில் 2000-2015 வரையான 15 வருட காலத்தில் 2000-2004 வரையான 4 வருடங்கள் மட்டுமே தனித்துவ அரசியலில் உறுதியானதும், நம்பகத் தன்மையுடையதுமான காலமாக இருந்தது.

பிந்திய இன்று வரையான 11 வருடங்களும் தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் நம்பகத் தன்மை மெல்ல மெல்லத் தேய்ந்து முற்று முழுதாக அழிந்து போன காலகட்டமாகும். இக்கால கட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும் ஆபத்துக்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டோம். இந்த 11 வருடங்களில் நாம் சுமந்த வடுக்களை பட்டியிலிட்டு நினைவு கூர்ந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் நமது தனித்துவ அரசியலில் உறுதியை மீளக் கட்டியெழுப்பி அரசியல் முகவரியை தொலைத்துவிடாமல் பாதுகாக்க முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது தேசிய ரீதியாக தலைவராலேயே அடையாளப்படுத்தப்படுகிறது. அவரது நடத்தை, திறமை, உண்மைத்தன்மை, ஒழுக்கம், நம்பகத்தன்மை, வாக்குறுதி மீறாமை போன்ற இன்னோரன்ன தன்மைகளே கட்சியின் தன்மைகளாகவும் நோக்கப்படுகிறது. கட்சிக்கு முஸ்லிம் மக்களுக்குள் இருக்கும் ஆதரவுத் தளத்தை பொறுத்தே தலைவருக்கு தேசிய அரசியலில் தலைமைத்துவ அந்தஸ்து கிடைக்கிறது. நாம் தலைவர் ஹக்கீமுக்கு காங்கிரஸின் ஊடாக கடமையைச் செய்து கௌரவத்தை வழங்கினோம். ஆனால் அவர் முஸ்லிம் சமூகத்துக்கும் நமது கட்சிக்கும் என்ன கடமையைச் செய்து என்ன கௌரவத்தை வழங்கினார் என்று அக்குவேறு ஆணிவேறாக பார்க்கிற தருணம் இப்போது வந்துள்ளது.

தலைவரை நிறுத்துப் பார்த்தே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும் அவரது அனைத்துப் பிழைகளையும் ஒவ்வொரு தேர்தலிலும் அங்கீகரிப்பது போன்று நாம் வாக்களிப்பதால் முஸ்லிம் காங்கிரசின் போராளிகளையும், ஆதரவாளர்களையும் தேர்தல் முடிந்தவுடன் அவர் கணக்கில் எடுப்பதில்லை. முதலாளிகளையும், கொம்பனிகாரர்களையும், அதிகம் படித்தவர்களையும், வெளிநாட்டவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்து சேவை செய்துவருகிறார். ஒரு முறை தற்காலிகமாக பாடம் கற்பிப்பதே நம்மை நாம் கௌரவப்படுத்தவும், றவூப் ஹக்கீம் நம்மைக் கணக்கில் எடுக்கச் செய்யவும் நமக்கு முன்னே உள்ள ஒரே வழியாகும்.
இலங்கை முஸ்லிம்களுக்கு றவூப் ஹக்கீம் செய்த கடமைகளும் தேசிய ரீதியாகப் பெற்றுத் தந்த கௌரவங்களும் என்ன?

வாக்குறுதிகளை மீறியமை – மீண்டும் மீறும் முயற்சி
1. சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, மருதமுனை, காத்தான்குடி, ஓட்டமாவடி, மூதூர், ஆகிய பகுதிகளுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவதாக பலமுறை உலமாக்கள், கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையிலும், பொது மேடைகளிலும் ஹக்கீம் வழங்கிய வஃதாக்களை நிறைவேற்றியதே கிடையாது. இப்பாராளுமன்றத் தேர்தலில் வழங்கியுள்ள வாக்குறுதிகளும் காற்றில் கலந்த கதையாகிவிடும்.

இம்முறை ஹஸனலிக்கு, பஷீருக்கு, நிஸாம் காரியப்பருக்கு, மன்சூர் தோற்றால் சம்மாந்துறைக்கு, அட்டாளைச்சேனைக்கு, ஓட்டமாவடிக்கு, வன்னிக்கு என்று 07 தேசியப் பட்டியல் எம்பிக்கள் வழங்குவதாக தலைவரால் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12 தேசியப் பட்டியல் உறுப்புரிமைகள் கிடைத்தால் மட்டுமே 2 உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரசுக்கு தருவதாக கூறியுள்ளது. 1 உறுப்பினர் தான் நிச்சயம் என்றிருக்கிறது. அதுவும் ஹக்கீம் விரும்புபவருக்கு அல்ல ரணில் விரும்புபவருக்கு கிடைக்கும் நிலையே இருக்கிறது. 2010ம் ஆண்டு 02 தேசியப்பட்டியல்களை பெற்றுக்கொண்டு மஹிந்தவின் அரசுக்கு மாறிப் போன கோபமும் ரணிலுக்கு உண்டு. ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி முறை கொண்டாடிவிட்டு தேர்தலில் வெற்றிபெற்றாலோ அல்லது தோல்விகண்டாலோ ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு தேசியப்பட்டியல் கூட கொடுக்காமல் இருக்கவும் இடமுண்டு. குருணாகல் வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த – முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்த றிஸ்வி ஜவகர்ஷாவின் பெயரை டிபெக்ஸ் பூசி அழித்துவிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி இடம் கொடுத்திருப்பதையும் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டும். றவூப் ஹக்கீமுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் செல்வாக்கை விட றிஷாட்டுக்கு இருக்கும் செல்வாக்கு அதிகமானதா?

இரண்டு அல்லது ஒன்றுதான் தேசியப்பட்டியலில் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டாலும் 07 இடங்களுக்கு வாக்குறுதி அளித்திருப்பது மீறுவதற்கு என்றே றவூப் ஹக்கீமால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்று தெரியாமலா இருக்கிறோம் ?

போராளிகளை இலகுவாக ஏமாற்றலாம் என்ற தலைவரின் கணக்கு வழக்குகளை நாம் பார்க்க வேண்டாமா?

2. ஒலுவில் துறைமுகத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈட்டை பெற்று தருவதாக கூறிய வாக்குறுதிகள் எங்கே போனது?

3. அம்பாறைக்கு கரையோர மாவட்டம் பெற்றுத் தருவதாக பலமுறை கூறிய வாக்குக்கு வயதென்ன?

4. சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை பெற்றுத்தருவாக தந்த வாக்குறுதி காற்றோடா இல்லை கடல் நீரோடா கரைந்தது!

5. கண்டியில் முஸ்லிம் மகளிர் கல்லூரி அமைத்துத் தருவதாக சொன்ன வாக்குறுதி எங்கே?

6. வாழைச்சேனை மத்தி எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து முஸ்லிம்களுக்கு தனியான பிரதேச சபை பெற்றுத் தருவதாக வாக்களித்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன.

7. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது அக்குறணை தேசியப் பாடசாலைக்கு 10 கோடி ரூபாயில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யாய், புனை கதையாய் போய்விட்டது.

8. ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஆவியாய் அலைகின்றன.

9. தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருக்குமே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் மீறப்பட்டன. இதனால் கட்சி நம்பிக்கை அற்ற அமைப்பாக மாறியுள்ளது.

10. தீர்ப்பதாக வாக்குறதியளிக்கப்பட்ட எந்த காணிப்பிச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.
இன்னும் ஏராளமான வாக்குறுதி மீறலைக் குறிப்பிடலாம் அப்படியாயின் தனிப் புத்தகம் தான் எழுத வேண்டி ஏற்படுமாதலால் ஏனைய விடயங்களைப் பார்ப்போம்

றவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எதனையும் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் கையாள்வதில்லை. தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக பிரச்சார ரீதியாக மட்டுமே அவற்றை பயன்படுத்துவார். எந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார் என்பதை மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள்.

தம்புள்ளை பள்ளிவாயில் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் இவர் நகர அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் நகர அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் 80 பேர்ச் துண்டொன்றை பள்ளி நம்பிக்கையாளர் சபை கேட்டபடி வழங்கி இப்பிரச்சினையை தீர்த்திருக்க முடியும். ஆனால் தம்புள்ளை பள்ளிவாயில் பிரச்சினையை வைத்து பிரச்சாரத்துக்காக பொய்க்குரல் கொடுத்தாரே அன்றி அல்லாஹ் கொடுத்த வாய்ப்பைக் கொண்டு தீர்த்துவைக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது பள்ளிப்பிரச்சினையை தீர்க்காமல் இழுத்தடித்தார். அவ்வாறே றவூப் ஹக்கீமும் இழுத்தடித்தார். அப்படியாயின் மஹிந்தவும், றவூப் ஹக்கீமும் இவ்விடயத்தில் முஸ்லிம் மக்களின் முன்னிலையில் ஒரே வகையான மார்க்க எதிரிகள் தானே!

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் அம்பாறை கரையோரத்துக்கு முழுமையான அதிகாரம் கொண்ட மேலதிக அரச அதிபர் காரியாலயம் அமைத்து தருவதற்கு எழுத்து மூல உத்தரவாதம் தயாராய் இருந்த போது ஹக்கீமினால் இறுதி நேரத்தில் அதனை ஏற்க மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. இம் முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால் இவ்வாறான ஒரு வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்ததை புதிதாக ஏற்படுத்தபட்ட நல்லாட்சியிடம் விளங்கப்படுத்தி ருPகுயு உத்தரவாதமளித்த மேலதிக அரச அதிபர் பணிமனையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் ஹக்கீம் அக்கறையற்று இருந்தார்.

எலக்ட்ரோ பிளாஸ்டிக் லிமிடட், லா டெக் பஸ் கொம்பனி ஆகியவற்றின் தலைவர் ரவி வெத்த சிங்கவின் உடமையாக இருந்த கடந்த அரசின் காலத்தில் நகர அபிவிருத்தி திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட ராஜகிரியவில் உள்ள மூன்றரை ஏக்கர் காணியை மீண்டு;ம் அதே கம்பனிகளுக்கு வழங்குவதற்கு பேரம் பேசி கமிசன் வாங்குவதற்காக லண்டனில் இருந்து கம்பனிகளின் சேர்மன் ரவி வெத்த சிங்கவை கொழும்புக்கு அழைப்பதில் இருந்த கரிசனை, தனித்துவத் தலைவர் ஹகீமுக்கு அம்பாறை கரையோர மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையை நல்லாட்சியிடம் கேட்டுப் பெறுவதில் இருக்கவில்லை. திருவாளர் ரவி வெத்த சிங்க பின்னர் ஊஐனு யினரால் லண்டன் திரும்பும் வேளை கைது செய்யப்பட்ட செய்தியை ஊடகங்களில் கேட்டும் படித்தும் இருப்பீர்கள்.

செப்டெம்பரில் அமைய இருக்கும் புதிய மைத்திரி, ரணில் நல்லாட்சியில் 100 நாட்களுக்குள் லஞ்ச ஊழலில் கைது செய்யப்படுகிற அமைச்சராக ஹக்கீம் இருக்க வாய்ப்பு உண்டு. தமது ஆட்சி நல்லாட்சி என்று நிரூபிக்கவும் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றியதற்கு பழிவாங்கவும், முஸ்லிம்களின் தனித்துவ கட்சிக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற பல்லாண்டு கால ஆசையை நிறைவேற்றவும் இவ்வாறு இடம்பெற வாய்ப்பு உண்டு என்பதை எண்ணும் போது போராளிகளே உடல் நடுங்கவில்லையா? மனசு கூசவில்லையா?

ஒலுவில் துறைமுகம் எப்போதோ கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வேலைத்திட்டம், ஹக்கீம் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த 2001-2004 காலத்தில் இத்துறை முகத்தில் கட்டுமானப் பணிகளுக்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைவாக கொந்தராத்தை பெற்றுக்கொள்ள இருந்த கம்பனியிடம் இவரால் கேட்கப்பட்ட கமிஷன் மிகவும் அதிகமாக இருந்ததனால் இத்துறைமுகம் அன்று கட்டப்படவில்லை. ஹக்கீமிடம் கமிஷனைக் குறைக்குமாறு கம்பனி எவ்வளவு கேட்டும் அவர் குறைக்க இணங்வே இல்லை. எப்படியெல்லாம் நமது அரசியல் வேட்கை வேட்டையாடப்படிருக்கிறது பார்த்தீர்களா? இத்துறைமுக வேலைத்திட்டத்தை ஆரம்பித்த எமது மறைந்த தலைவரின் ஆத்மா என்ன பாடுபட்டிருக்கும் சகோதர சகோதரிகளே!

றவூப் ஹக்கீமை பணத்துக்கு வாங்கலாம் என்று ரணில் எல்லா அரசியல் வாதிகளிடமும் சொல்லியுள்ளார். பணமும், பெண்ணுமே ஹக்கீமின் பலவீனம் என்பது இந்த நாட்டிலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும் தெரியும். இது முஸ்லிம்களின் தேசிய அரசியல் அந்தஸ்துக்கு எவ்வளவு கேடுகெட்ட நிலைமை என்பதை எண்ணிப்பாருங்கள் சகோதரர்களே! நண்பர்களே!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது என்றே ஹக்கீம் தீர்மானமெடுத்திருந்தார். இதற்காக சஜின் வாஸ் குணவர்தன மூலம் 100 மில்லியன் ரூபாய் பணத்தையும் முதற்கட்டமாக பெற்றிருந்தார். கிழக்கில் உலமாக்களை சமாளிக்க தேவை என்று கூறித்தான் ஹக்கீம் அப்பணத்தைப் பெற்றிருந்தார்.

இறுதியில் ரணிலிடம் 600 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்பட்டு 300 மில்லியன் பணம் பெற்றுக்கொண்ட பின்பு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு மைத்திரிக்கு என்று ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஊடக சந்திப்பு முடிந்த கையோடு ஹக்கீம் மைத்திரி கலந்து கொள்ள இருந்த பொத்துவில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க தாருஸ்ஸலாத்தில் இருந்தே வீட்டுக்கும் போகாமல் நேரடியாக பொத்துவில் புறப்பட்டுச் சென்றார்.

ஏற்கனவே உலமாக்களுக்கு கொடுத்து சமாளிக்கவென மகிந்தவிடம் பெறப்பட்ட 100 மில்லியன் ரூபாவை வீட்டுக்குச்சென்று தன் மனைவியிடம் பெற்றுக்கொள்ளுமாறு சஜினுக்கும், கொடுக்குமாறு மனைவிக்கும் தொலைபேசியில் சொல்லிவிட்டு பொத்துவில் விரைந்தார் தலைவர்.

சஜின் வாஸ் தனது முஸ்லிம் நண்பர் ஒருவைரை தலைவரின் வீட்டிற்கு அனுப்பி பணத்தைப் பெற்றுக்கொண்டார். பணத்தை திருப்பிக்கொடுக்கும் போது எனது கணவர் இப்படி ஏமாற்றியதற்காக அவருக்கு ஏதும் ஆபத்துக்கள் விளைவிக்க வேண்டாம் என்று ஹக்கீமின் மனைவி பணம் மீளப்பெற வந்தவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பி;ன்னர் மற்ற தரப்பினரிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் அவர்களை கொண்டு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கினார். அஸ்லம் மார்க்கப்பற்றுள்ள இஸ்லாமியக் கடமைகளைத் தவறவிடாத, பல ஹஜ் கடமைகளை முடித்த, ஒவ்வொரு வருடமும் உம்றா கடமையை நிறைவேற்றுகிற மனிதர். இந்த உண்மையை ஒத்துக்கொள்வார் என நம்புகிறோம். லௌஹீக அரசியலுக்காக மறுக்கமாட்டார் என நம்புவோம். பொய்யுரைத்து தலைவரின் அழுத்தத்தால் மறுப்பதாயின் இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதுவிட்டு குர்ஆனை சாட்சியாக வைத்து அல்லாஹ்மீது ஆணையிட்டு, வல்லாஹி என்று சொல்லி பகிரங்கமாக வந்து மறுக்கட்டும் பார்க்கலாம், தனது சாலிஹான பிள்ளைகளின் மீது அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு அஸ்லம் அஞ்சிக் கொள்ள வேண்டும். நாம் பெருமையாக நினைத்துக்கொள்ளும் தனிக்கட்சி தலைமைத்துவத்தின் அசிங்கத்தையும் அவலத்தையும் நினைத்து நாம் கண்ணீர்விட்டு அழவேண்டும் போராளிகளே!

நமது கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமைத் தவிர உலகத்தில் எந்த கட்சித் தலைவரின் அல்லது சமூகத்தலைவரின் வீட்டின் முன்னால் தலைவரால் ஏமாற்றப்பட்ட ஓர் அபலைப் பெண் தன் காதலின் தூய்மையை நிரூபிக்க தன்னையே தீயிட்டு கொழுத்திக்கொண்டு உயிர் துறந்த வரலாறு இருக்கிறது சகோதரர்களே! இதனால் கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ்காரர்களாகிய நாம் இலங்கை தேசத்தின் முன்னாலும், ஏனைய சமுதாயங்களின் முன்னாலும் எப்படி தலை கவிழ்ந்து கிடக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இது மட்டுமா? இந்த தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மகளை பத்து வருடங்களாக ஒவ்வொரு மாதமும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து பராமரித்து வருகிறார். நமது ஏழைப் போராளிகளுக்காக தலைவர் ஒரு மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் அல்லது நமது கட்சிப் புனரமைப்புக்கு மாவட்டம் தோறும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை யாராலும் கூறமுடியுமா?

இந்த அப்பாவி குமர் பிள்ளைக்கு குடும்பத்தினரால் மாப்பிளை எடுக்க முடியவில்லை, போகுமிடம் எல்லாம் பழைய கதைபேசி நிராகரிக்கிறார்கள். சரியான வேலை எடுக்க முடியவில்லை எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்தாலும் நிகழ்ந்த அநியாயம் அநியாயந்தானே முஸ்லிம்களே! அநியாயம் இழைத்தவர் அநியாயக் காரர் தானே மக்களே! தலைவரின் பிள்ளைகள் நிம்மதியாக வாழ்கிறார்கள் அல்லவா? (அந்தப் பிள்ளைகளுக்கு தகப்பனின் பாவ மூட்டைகளை அல்லாஹ் கட்டி விடாதிருப்பாhனாக ஆமீன்.) நாம் அவருக்கு அரசியல் அரியணை வழங்குபவர்கள், பதவி கொடுப்பதற்கு எமது வாக்குகளைப் பயன்படுத்துபவர்கள் என்பதற்காக எங்களையும் கஷ்டத்திற்கு ஆட்படுத்திவிடாதே யா அல்லாஹ். கொழும்பு – 03 பேதிரிஸ் வீதி, றோயல் கோர்ட் தொடர்மாடி வீட்டில் வசித்துவரும் இந்த பெண்பிள்ளைக்கு பாதுகாப்பினையும், தைரியத்தையும், நல்வாழ்வையும் கொடுத்தருள்வாயாக யா றப்பல் ஆலமீனே!

இவையெல்லாம் உண்மையில்லை என்று தலைவரால் மறுக்க முடியுமா? மறுப்பதாயின் அஸ்லம் எவ்வாறு சத்தியம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோமோ அவ்வாறு பகிரங்கமாக சத்தியம் செய்து தருவாரா ஹக்கீம்?

என்ன நடந்தாலும் கட்சிக்கு எதிரான சதி என்று சொல்லி நமது போராளிகளையும், தாய்மார்களையும் ஏமாற்றிவிட்டுப் போகிறார் தலைவர். அன்பர்களே தலைவரின் ‘சுதி’ யே சதிக்கான அத்திவாரம் என்பதை விளங்கிக் கொள்வோம்.

இப்படிக் கடந்த 11 வருடகாலமாக ஹக்கீமின் தலைமைத்துவ வரலாறு தலை சாய்ந்து கிடக்கிறது. முஸீபத்து பிடித்து ஆடுகிறது. இவரை எதிர்த்து வெளியேறிய எந்த அரசியல்வாதி இன்று நாசமாகியுள்ளார்? இவருடன் இருக்கும்போது இருந்ததைவிட வெளியேறிய பின் நன்றாகத்தானே இருக்கிறார்கள். ஹக்கீமுடன் இன்னும் ஒன்றாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் தூர்ந்துபோய் கிடப்பதை காண்கிறோம் அல்லவா? முஸ்லிம் தேசிய அரசியலின் முக வெற்றிலையான கல்முனைக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஹக்கீமின் தலைமைத்துவத்தில் ஒரு பிரதி அமைச்சர் பதவி தானும் கிடைக்கவில்லை. தலைவர் அஷ்ரஃப் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் தலைவராகவும், நாடு போற்றும் முக்கிய அமைச்சராகவும் இருந்து காட்டிய இடமல்லவா கல்முனை? மர்ஹும் தலைவர் பிறந்த மண்ணான சுமார் ஐம்பதாயிரம் வாக்குகளைக் கொண்ட சம்மாந்துறைக்கு காலாகாலமாக கிடைத்து வந்த பாராளுமன்ற உறுப்பினரை ஹக்கீமின் தலைமைத்துவமே இல்லாமல் செய்தது என்பதை எப்படி மறக்கமுடியும் போராளிகளே! எம்மையெல்லாம் படைத்த நாயன் பார்த்துக் கொண்டிருக்கிறான். முதலில் எமது கட்சியையும், ஆதரவாளர்களையும் ஹக்கீமிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று இருகரம் ஏந்தி வல்லவன் அல்லாஹ்வை இறைஞ்சுவோம்.

இப்போது பக்கச் சார்பற்று உண்மையின் பக்கம் நின்று சிந்திப்போம் போராளிகளே! நமது அப்பழுக்கற்ற தலைவர் மர்ஹும் ஆ.ர்.ஆ. அஷ்ரஃப் அவர்கள் உருவாக்கிக் காப்பாற்றி தந்த நமது சமுதாயத்தின் தனித்துவ அரசியலை மீள்கட்டமைப்பு செய்ய வேண்டுமா இல்லையா? உறுதியுடன் எழுச்சி பெறவைக்கும் தேவை உள்ளதா இல்லையா?

ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு ஊடாக எந்த பெரிய தேசியக் கட்சியிலும் நமது முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை அடைய முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணிலையும் ஏமாற்றி ருPகுயு யுடன் போவது – பின்னர் ருPகுயு ஐ ஏமாற்றி விட்டு மீண்டும் ரணிலிடம் வருவது – சந்திரிக்காவை ஏமாற்றி ரணிலிடம் வருவது- ரணிலை ஏமாற்றி மஹிந்தவி;டம் போவது – மீண்டும் மஹிந்தவை ஏமாற்றி ரணிலிடம் வருவது – என்று தொங்கோட்ட கட்சித் தாவல் அரசியல் நடாத்தி இந்த நாட்டில் முஸ்லிம் காங்கிரசுக்கு மரியாதையை இல்லாமல் செய்துவிட்டார் ஹக்கீம். இனி நமது கட்சிக்கும், நமது சமுதாயத்திற்கும் தேசிய அரசியலில் நம்பகத்தன்மையும், அஷ்ரஃப் இருந்த காலத்தில் கிடைத்த மரியாதையும் மீண்டும் கிடைக்க வேண்டுமானால் ஹக்கீமின் தலைமைத்துவத்தை அகற்றிவிட்டு எதிர்காலத்தில் புதிய தலைமைத்துவ சபையை நிறுவவேண்டும். நல்லொழுக்கமுள்ள, உறுதியான புதிய தலைமையை அல்லாஹ் காட்டுவான் என்ற நம்பிக்கையோடு இருப்போம். இன்ஷா அல்லாஹ்!

அஷ்ரஃப் ஜன ரஞ்சக அரசியல் செய்தார்
ஹக்கீம் ஜனவஞ்சக அரசியல் செய்கிறார்

அஷ்ரஃப் அரசியலில் வாழ்ந்து காட்டினார்
ஹக்கீம் அரசியலில் நடித்துக் காட்டுகிறார்
அணிதிரள்வோம்! பாடம் புகட்டுவோம்! சுய நலமிக்கு தோல்வியை பரிசளிப்போம்! நமக்கு கட்சி மீது இருக்கும் அதீத பற்றையும், விசுவாசத்தையும் தனது சொந்த பேராசைகளை அடையவும், பணம் பண்ணவும் ஏனைய உளக்கிளர்ச்சிகளில் திளைக்கவும் முதலீடு செய்துவரும் ‘ போகியை’ அரசியலில் இருந்து விலகி ஓடச் செய்வோம் வாருங்கள்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *