(R.Hassan)
இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய  காத்தான்குடி ஊர் வீதி புனரமைப்புப் பணிகளுக்காக நெடுஞ்சாலை அமைச்சினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய வீதி புனரமைப்புக்கான (காபட்) பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை  மூன்று மணிக்கு காத்தான்குடி நகரசபை செயலாளர் சர்வீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வீதி புனரமைப்புக்கான (காபட்) பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. 76f7b2aa-e2ff-4ee9-b458-25f31c41148e

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இவ்வீதி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். அதனையடுத்து,  உடனடியாக இவ்வீதியை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புக்கு அமைய 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வீதி புனரமைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.​6304f432-755b-4187-8256-82f55509eb6d

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *