CSN தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி பரிமாற்றத்தின்போது மோசடி, மற்றும் அரச வளங்களின் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் மார்ச் 10ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் தம்மிக ஹேமபால குறித்த உத்தரவை வழங்கினார்.namail_law00

இக்குற்றச்சாட்டு தொடர்பில் FCID இனால் கைதாகியுள்ள, CSN தொலைக்காட்சியில் பிரதான செயற்பாட்டு பணிப்பாளராக கடமைபுரிந்த நிஷாந்த ரணதுங்க, அதன் பணிப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களான அஷான் பெனாண்டோ, கவிஷான் திஸாநாயக்க ஆகியோருக்கும் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் யோஷிதவின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ச உட்பட சட்டத்தரணிகள் பலர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *