தான் வாழுகின்ற பிரதேசத்தை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்கின்றவனே அரசியல் வாதி அந்த வகையில் எனது பிரதேசமான இந்தப்பகுதியை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்லும் நோக்கில் தான் நான் செயற்படுகிறேன்.

என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  தெரிவித்தார்.  பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் கோரளைப்பற்று மத்தி, பிரைந்துறைச்சேனை இல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் இடப்பட்ட பன்சலை வீதி,கலாச்சார நிலையம், தாய்சேய் நலன்புரி நிலையம் என்பன இன்று பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்cdc892c4-1c45-4739-bd5d-2fd2d4da648f

இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகளை கட்டம் கட்டமாக நான் மேற்கொள்வேன், அமீர் அலி என்ன செய்தார் என்று கேட்கின்ற காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களுக்கு எனது சேவைகளின் மூலமே நான் பதில் அளிக்கிறேன்,இந்த பிரதேசத்தில் உள்ளவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன், சுமார் 16 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்குறிய அபிவிருத்தி வேலைகள் கடந்த காலங்களில் என்னால் இந்தப்பிரதேசத்தில் செய்யப்பட்டுள்ளது, எதிர்காலத்திலும் இந்த பிரதேசத்து பிரதிநிதித்துவம் காப்பாற்ற படவேண்டும் இதனை வெறுமனே ஒரு நாளைக்கு கிடைக்கின்ற அரிசிக்காகவும், ஒரு சோத்துப்பார்சலுக்காகவும் தாரைவார்த்துக்கொடுக்கின்ற சமூகமான நாம் இருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா,அபிவிருத்திக்குழு தலைவர் மன்சூர்,தலைமை சுகாதார பரிசோதகர் திரு இன்பராஜா,சுகாதார பரிசோதகர் சிஹான்,மகப்போற்றுத் தாதி ஜீவலதா, தாதி திருச்செல்வம்,ஹூதா பள்ளிவாயல் தலைவர் நிசார் ஹாஜி,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயினுதீன் ஹாஜி,அமைச்சரின் இணைப்பாளர் ஒசாமா தெளபீக்,முகைதீன் தைக்கா பள்ளிவாயிலின் தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *