பிரதான செய்திகள்

”Batticaloa Campus’ அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும்’ – கல்வி அமைச்சர்!

Batticaloa Campus, தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ அல்லது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

Batticaloa Campus-இற்கு பட்டங்களை வழங்கும் அனுமதியை உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை விட இந்த வளாகத்தில் வசதிகளும் கட்டடங்களும் அதிகம் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்காக அதனை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு 30,000 மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்களே உள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 17 ஆவது பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

Related posts

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்!

Editor

வட மாகாண சபைக்கு முதலமைச்சராக  விக்னேஸ்வரன் பதவி வகிக்க வேண்டும்-கே.காதர் மஸ்தான்

wpengine

ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” ரிஷாட் பதியுதீன்

wpengine