பிரதான செய்திகள்

ATM இல் நிதி மோசடி! கவனம்

இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது.

குழுவொன்று இணைந்து வங்கி நிர்வாக சபை என அடையாளப்படுத்தி, போலி தகவல் வெளியிட்டு பயனாளர்களின் ATM அட்டையின் இரகசிய இலக்கங்களை பெற்றுக் கொள்ளும் மோசடி நடவடிக்கை தொடர்பிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில்,
“அடையாளம் காணப்படாத குழுவொன்றினால் வங்கி நிர்வாக சபை ஊழியர்கள் போன்று செயற்பட்டு, வாடிக்கையாளர்களின் ATM அட்டையில் உள்ள தரவுகளை கையில் கொண்டு செல்லும் இயந்திரத்தில் பெற்று கொள்கின்றனர்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளும் தரவுகளில் தங்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்தை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் தங்களின் ATM அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தை ATM இயந்திரத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

சந்தேகத்திற்கிடமாக முறையில் ஏதாவது நடந்தால் தங்களுக்கு அறிவிக்கவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு ஏற்றுக் கொள்ள மாட்டேன் டிரம்ப்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முசலிக்கு விஜயம்! பிரதேச செயலகத்தில் கூட்டம்

wpengine

பால் மாவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

Editor