Breaking
Sun. Nov 24th, 2024

வங்கிகளில் பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான முறையில் எவரும் நடமாடினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
போலியான ATM அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் மூன்று பேரை கடந்த மாதம் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடனட்டை பொருத்தியிருக்கும் இடங்களில் சில உபகரணங்களைப் பொறுத்தி அதன் மூலம் கடனட்டைகளின் தகவல்களைச் சேகரித்து அதனை தமது அலைபேசிகளில் தரவேற்றிக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி போலி கடனட்டைகள் தயாரித்து பணக் கொள்ளையில் ஈடுபட்டமைத் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஜனவரி மாதம் 20ஆம் திகதி கோட்டை செத்தம் வீதியில் வைத்து சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

21ஆம் திகதி வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சீனப் பிரஜையும், பெப்ரவரி 3ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வைத்து ருமேனியா நாட்டுப் பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ருமேனியப் பிரஜையை பாணந்துறை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேநபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 200, 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், தகவல்களைச் சேமிக்கும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *