பிரதான செய்திகள்

Amazon நிறுவனம் இலங்கை தேசிய கொடிக்கு எதிரான விளம்பரம்

இலங்கை தேசிய கொடியின் உருவத்துடன் கூடிய கால் மிதித் துடைப்பான் விளம்பரத்தை Amazon நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ´வழுக்காத கால் மிதித் துடைப்பான்´ இல் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தகவல் கிடைத்த உடனேயே, அது குறித்த தகவல்களை சீன வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கி, இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி கால் மிதித் துடைப்பான்கள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கோரிக்கை விடுத்தது.

இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கால் மிதித் துடைப்பான்கள் மற்றும் இதுபோன்ற எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு, அமேசனில் இந்தத் தயாரிப்புக்களை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கு தூதரகத்தின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. விளம்பரம் தற்போது அமேசனிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், இலங்கையின் தேசியக் கொடியுடன் கூடிய எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்காக சீனாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு இல்லை-அமைச்சர் ரோஹித்த

wpengine

சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்

wpengine