2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில் (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மாஹிர்,றிஷ்லி முஸ்தபா, கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் காதர் சேர், பொருளாலர் கலீல் முஸ்தபா, ஏ.எஸ். முனாஸ், ஏ.எல். நெளபர் மெளலவி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான CM.முபீத்(Jp), ஹமீட் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச முக்கியஸ்தர் மஃறூப் ஆகியோர் கலந்து கொண்டனர்….