பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடத்திற்கான ஊடக மாநாடு

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த வருடத்திற்கான ஊடக மாநாடு குறித்த மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த மாநாடு நேற்று காலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

மேலும், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டிற்கு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

Invitation – Photo Exhibition – 29-31 March 2022 – Palestine Land Day

wpengine

அம்புலன்ஸ் வண்டியினை நிறுத்திவிட்டு வவுனியாவில் ஐஸ்கிறீம்! பல விமர்சனம்

wpengine

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine