Breaking
Mon. Nov 25th, 2024

(அ.அஹமட்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் ஏதாவதொரு நிகழ்வு இடம்பெற்றால் அவற்றை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி,அது முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வு போன்ற இனவாத சாயம் பூசிவிடுவார்கள்.நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் உள்ளார்.

இதே மோடி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் இலங்கை வந்திருந்தால் “இந்திய முஸ்லிம்களின் இரத்தம் குடித்த மோடி,இலங்கை முஸ்லிம்களின் இரத்தம் குடிக்க மஹிந்தவின் அனுசரணையோடு வந்துள்ளார்” என்ற வகையிலான பிரச்சாரத்தை முஸ்லிம் மக்களிடையே முடுக்கி விட்டிருப்பார்கள்.இன்று இலங்கை நாட்டில் அப்படி எந்த பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படவில்லை.இது தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய கனவான் அரசியல் முறைமையாகும்.

மோடியின் வருகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீர் மக்களுக்கு,2002ம் ஆண்டு இடம்பெற்ற குஜ்ராத் கலவரத்தின் போது முஸ்லிம்களை கொன்றதன் பின்னணியில் மோடி இருந்தது போன்ற அறிக்கையை விட்டுள்ளார்.இன்று இதனை நாமல் ராஜபக்ஸ போன்றவர்கள் கூறுவது அரிதான விடயமாகும்.இதனூடாக அவர் இதுவெல்லாம் பிழையான விடயங்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாமல் ராஜபக்ஸவுக்கு மோடியை தாக்கி பேச வேண்டுமென்ற தேவை இருந்தால் எட்கா ஒப்பந்தம்,திருகோணமலை குதங்களை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் விடயமென ஆயிரம் விடயங்கள் உள்ளன.அவற்றையெல்லாம் தாண்டி மோடியின் இவ்வாறான இனவாத செயல்களை கதைத்துள்ளமை பிழையை பிழையென அவர் சுட்டிக் காட்டும் பண்பு கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இன்று பலஸ்தீன விடயங்களில் இஸ்ரேலுக்கு எதிரானதும் பலஸ்தீனத்துக்கு ஆதரவுமான நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினர் கடைப்பிடிக்கின்றனர்.தற்போது இலங்கை அரசு தனது வெளிநாட்டு உறவுகளை கருத்தில் கொண்டு இவ்விரு நாடுகளின் விடயங்களிலும் நடுநிலை போக்கை கடைப்பிடிப்பது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரும் இருக்கலாம்.அவ்வாறல்லாமல் அவர்கள் இதனை எதிர்த்து நிற்கின்றமையானது சரியை சரியெனவும் பிழையை பிழை எனவும் கூறும் மனோ நிலை கொண்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *