(அஸாம் அப்துல் அஸீஸ்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசுனுடைய தலைவர் அமைச்சர் றிஷாதுக்கு தபால் துறை அமைச்சு கிடைக்கப்போவதாக மு.காவை சேர்ந்த சிலர் கதை பரப்பி வருகின்றனர்.இதனூடாக நாங்கள் பல்வேறு விடயங்கள் பற்றி விளங்கிக்கொள்ள முடியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினுடைய காலத்தில் அமைச்சர் முஸ்லிம் காங்கிரசுனுடைய தலைவர் அமைச்சர் ஹக்கீமுக்கு தபால் துறை அமைச்சு கிடைத்திருந்தது.இது அவருக்கு கிடைப்பதற்கு அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடத்தில் அவரது தனிப்பட்ட விடயங்களின் காரணமாக கணக்கில் எடுபடாமல் இருந்தமையே காரணம் என மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறியிருந்தார்.இதனால் தான் என்னவோ மு.காவினர் தபால் அமைச்சு என்றால் கழி பட்டவர்களுக்கு கொடுப்பது என்ற வகையில் உள்ளத்தில் பதித்து வைத்துள்ளனர்.
அமைச்சர் றிஷாத் அன்று தொடக்கம் இன்று வரை பலமிக்க அமைச்சுக்களில் அமர்ந்தவர்.அவருக்கு பெறுமதியற்ற அமைச்சு வழங்கப்படுமாக இருந்தால் அவர் அரசுக்கு வேண்டாதவராக பார்க்கப்படுவதை அறிந்து கொள்ளலாம்.அவர் இன்று அரசில் இருந்து கொண்டு அரசை எதிர்ப்பதால் இந் நிலை தோன்ற வேண்டும்.அப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டால் அவரின் ஆதரவாளரான நாங்கள் எங்கள் தலைவரை பெருமையுடன் எங்கள் தலைவராக உலகுக்கு பறை சாட்டுவோம்.
சிறந்த அமைச்சை பெற்று கொள்ளை அடிக்கும் சிந்தனை எங்கள் தலைவருக்கில்லை.கிடைக்கும் அமைச்சை சிறந்ததாக மாற்றியமைக்கும் திறன் எங்கள் தலைவரிடம் உள்ளது.அமைச்சர் ஹக்கீம் நீர் வழங்கள் அமைச்சை பெருப்பெடுத்தார்.முஸ்லிம்களின் பெருநாள் தினத்திலும் நீர் வெட்டு ஏற்படுத்தியதும் நீர் கட்டணத்தை அதிகரித்ததுமே அவரது சாதனை.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாத் பொறுப்பெடுத்த போது நஷ்டத்தில் இயங்கிய சதோச மற்றும் சீனிக் கூட்டுத்தாபனங்களை இலாபத்தில் இயங்கச் செய்தார்.இது தான் எங்கள் தலைவருக்கும் உங்கள் தலைவருக்குமுள்ள வேறுபாடாகும்.
அமைச்சர் ஹக்கீம் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த போது ஆயிரமளவான வேலை வாய்ப்புக்கள் வழங்க முடியுமாக இருந்தும் அமைச்சர் ஹக்கீம் நோர்வே நாட்டுடன் செய்து கொண்ட பண ஒப்பந்தத்தின் பெயரில் அவற்றை வழங்காமல் உதறி வீசிவிட்டு வந்தார்.அன்று தொடக்கம் இன்று வரை முகாவின் ஆதரவாளர்கள் நடு வீதியில் குப்பை கொட்டி கொண்டிருக்கின்றனர்.அன்று சுயநலம் பாராது செயற்பட்டிருந்தால் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கியிருக்கலாம்.
எங்கள் தலைவருக்கு எந்த அமைச்சு கிடைத்தால் என்ன? எமது சமூகத்தின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள அமைச்சு தான் தேவையா? உங்கள் தலைவரின் சிந்தனை போன்றே உங்கள் சிந்தனையும் அமைந்துள்ளது.சிறந்த அமைச்சு இல்லாது போனால் இலாபம் பெற முடியாது.
இது தொடர்பில் இன்னும் அதிகமாக எழுதலாம்.இருந்தாலும் அவற்றை எழுத விரும்பவில்லை.இது ஒரு பொய் கதை என்பதை கூறி முடித்துக் கொள்கிறேன்.