(சிபான், மருதமுனை)
இன்றும் இரக்கமே சுரக்காத மிருகங்களான இஸ்ரேலியர்களினால் 6500 பலஸ்தீன முஸ்லிம்கள் பலர் இஸ்ரேலிய சிறைகளில் சொல்லொணாத்துன்பத்துக்கு ஆளானவண்ணம் இருக்கின்றார்கள். அவர்களில் 1500 பேர் வரை தம்மை விடுவிக்கக் கோரி தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
காலாதிகாலமாக முஸ்லிம்களின் வாக்குகளைச் சூறையாடிக் கொண்ட நல்லாட்சி அரசின் கூட்டாளிகளான இவர்களால் ஏன் பலஸ்தீன கைதிகளை விடுவிக்கக் கோரி ஒப்பமிட முடியவில்லை? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் முடியுமான ஒரு காரியத்தினை இவர்கள் மறுத்ததற்கான காரணத்தினை எமது சமூகம் இன்னும் ஏன் கேள்விக்குட்படுத்தவில்லை?
பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசீர் அரபாத்துடன் மகிந்த அன்று முதல் கொண்ட உறவின் வெளிப்பாடே இன்றும் அந்த நாட்டு முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக் கோரி கையொப்பமிட ஏதுவாக அமைந்திருக்கலாம்.ஆனால் இஸ்ரேலின் ,அமெரிக்காவின் கைப்பாவைகளாகக் காட்டிக் கொண்ட ரணில் மற்றும் அவர்தம் கூட்டணிக்காக தொடர்ந்தும் வாக்களிக்கும் முஸ்லிம் உறவுகள் எப்போதாவது இது தொடர்பில் ஆராய்ந்ததுண்டா? குஜராத்தை சுடுகாடாக்கிய மோடி இன்று நல்லாட்சிக்கு ஆதரவு மூடி போட வந்திருப்பதையாவது அலட்டிக்கொள்கின்றோமா?
முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வந்த மகிந்த என்கின்ற தலைவனை சர்வதேசம் சிக்கலுக்குள் சிக்கவைத்துக் காவுகொண்டமையை இன்றும் அறியாதவர்களாக நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். யஹூதி நஸாராக்களுடன் எம்மை அழிப்பதற்கான சதியை அரங்கேற்ற எமது வாக்குப்பலத்தின் மூலம் நாமே உத்தரவாதம் அழித்திருக்கின்றோம். அதற்காக தூபமிட்ட முஸ்லிம் தலைமையை அன்றில் இருந்து இன்று வரை சிரமேல் சுமக்கின்றோம்.
வெறுமெனே இஸ்ரேல் பலஸ்தீனத்தை காவுகொண்டு காரணமே அறியாமல் பாலகர் முதல் வயோதிபர் வரை கொன்று குவிக்கும் போதும், அமேரிக்கா ஆப்கான் ,ஈராக் இனை துவம்சம் செய்த போதும் இரத்தம் பீறிட்டு சோடாக் கேஸ் போல் கொந்தழித்து அடங்கியதனை விட எமது சமூகம் ஆக்கபூர்வமான வேலைகள் எதனை செய்திருக்கின்றது. குறைந்த பட்சம் ஜனாதிபதி தேர்தல்களில் நாம் வாக்களித்து அரியாசனம் அமர்த்திய நபர்களுக்கு , சர்வதேச முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு ஏதாவது அழுத்தமாவது கொடுத்திருக்கின்றோமா?
இனியாவது எமது சமூகம் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். வெறும் உணர்ச்சிகளுடன் கூடிய பசப்பு வார்த்தைகளுக்காக ஐந்தாறு வருடங்களுக்கு எமது வாக்குபலத்தினாலேயே எம்மை அடகு வைத்துவிடுகின்ற நிலைகளில் இருந்தும் மீள வேண்டும்.