Breaking
Mon. Nov 25th, 2024

(முசலி அமுதன்)

23.04.2017 ம் திகதி வில்பத்து பேணற்காடு என்ற தலைப்பில் 40033.525 ஹெக்டர் ஏக்கர் அரச வர்த்தமானியில் வன இலாக்காவிற்காக இலங்கை ஜனாதிபதியும் சுற்றாடல் வனவள அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (மறிச்சுக்கட்டி முதல் குஞ்சுக்குளம் வரை கிழக்கு பக்கம்).

இச் செய்தியை அறிந்து சிலர் தினசரி பத்திரிகைகளிலும் வானொலித் தொலைக்காட்சிகளிலும் முக நூல்களிலும் பலவகையான கருத்துக்களை களத்திற்கு வந்து ஆராயாமல் பார்வை இடாமல், காதேறல் செய்திகளை கேட்டும் கைத் தொலைபேசி நேர்காணல் மூலமும் அறிந்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்து வந்துள்ளனர்.

இவற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும் அடங்கும். அவர்களுக்கும் எமது நன்றிகள்.

வில்பத்து என்பது வடமேல் மாகாணத்திற்கு சொந்தமான தேசிய நந்தவனமாகும். இதற்குள் ஒரு கொட்டில் கூட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் அமைக்கப்படவில்லை என்பது உண்மையாகும். மாறாக சிங்கள மொழி பேசும் பௌத்த,கிறிஸ்த்தவர்களே குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.(பூக்குளம்)

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களால் அருவியாறு 4ம் கட்டை முதல் மறிச்சுகட்டி உப்பாறு வரை இடைப்பட்ட பகுதியில்தான் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக் குடியேற்றப்பிரதேசம் வடமாகாணம் முசலிப் பிரதேசத்திற்கு உட்பட்டதாகும். இதைத்தான் சில பேரின வாதிகளும் பெரும்பான்மை சமூகத்தின் மத குருக்களும் எமது சமூகத்தின் சில குறுகிய சிந்தனையாளர்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொள்ளையடித்துவிட்டார் என குறை கூறியும் கொக்கரித்தும் வந்துள்ளார்கள். சில மஞ்சட் காவிகள் கோட்டை மீது படையெடுத்தும் சென்றுள்ளார்கள். எமது மக்களின் 43 நாட்கள் அகிம்சை வழி போராட்டத்தின் மூலம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கூற்று உண்மையென அறிந்து தாங்கள் தெரிவித்த நினைத்திருந்த விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதென உணர்ந்து இப்போராட்டம் வெற்றி பெற தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்களுக்கு எமது மனப் பூர்வமான நன்றிகள்.

இவ்வரச வர்த்தமானி அறிவித்தலின் படி பிரதான பாதையின் கிழக்குப்பக்கமாக மறிச்சுக்கட்டி முதல் குஞ்சுக்குளம் வரை 250m அகலம் மட்டுமே குடியிருப்புக் காணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனையவை வன இலாக்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் சம்மந்தமாக ஜனாதிபதி அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களின் தலைமையில் அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய மு.அ யின் தலைவர் அஸாத் சாலி சட்டத்தரணிகள் என். எம் சஹீட், ருஸ்தி ஹபீப், செயலாளர் நாயகம் சுபைர்தீன் இன்னும் பல புத்தி ஜீவிகளுடன் எமது அமைப்பினரும் இணைந்து சென்றிருந்தோம்.

எமது விடயத்தை நன்கு கேட்டு அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் எதிர்வரும் 13ம் திகதி இதற்கான நல்ல தீர்வினை தருவதாகவும் போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, போராட்டத்தை கைவிட்டு பதிலுக்காக காத்திருக்கின்றோம். இப் போராட்டத்திற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய அரசில்வாதிகளுக்கும் அமைப்புத் தலைவர்களுக்கும் பங்குபற்றிய மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது இந்த 43 நாட்கள் போராட்டத்தின் மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் கூற்று உண்மையென உணர்ந்திருக்கின்றனர்.

இதை விடுத்து முக நூலில் எழுதுகின்ற என்னருமைச் சகோதரர்கள் சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக கன்னக் கோல் சாத்துகின்றனர். எது விடயத்தையும் நேரடியாக வந்து பார்த்து தீர விசாரித்து தெளிவாக எழுதுவதே ஊடகத் தருமமாகும். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
“எமது மக்களுக்குத் தேவை 1990 ற்கு முன்பிருந்த எல்லைகளே”.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *