Breaking
Mon. Nov 25th, 2024

அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அப்படியே பாதுகாத்து ஏனைய மதங்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசனத்தை பாதுகாத்து அதனை வளர்ப்பது தொடர்பில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அபேகம மண்டபத்தில் இன்று நடைபெற்ற இராணுவத்தினருக்கு வீடுகள் மற்றும் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தர்மம் தொடர்பான உயர்ந்த செய்திகளை உலகிற்கு கொண்டு செல்வதற்காகவே சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் இம்முறை கோலாகலமாக நடைபெறுகிறது.

அதேவேளை படையினர் இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்த பங்களிப்பை நாட்டு மக்களால் எப்போது மறந்துவிட முடியாது.

படையினருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்படும். அவர்களின் நலன்களுக்காக நிறைவேற்ற வேண்டியவற்றை தொடர்ந்தும் அரசாங்கம் பொறுப்புடன் நிறைவேற்றும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *