கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், விளம்பரங்கள் மூலமான வருமானம் 7.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தும் உள்ளது.
இது ஒட்டுமொத்த வருமானத்தில் 85% பங்களிப்பை கொண்டுள்ளதாக, ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டின் முடிவில், விளம்பர வருமானம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சிபெறும் எனவும் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 194 கோடியாக உள்ளது.
விரைவில், இது 200 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.