Breaking
Mon. Nov 25th, 2024

முஸ்லிம் காங்கிரஸிற்குரிய காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சொந்தமான 110 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய காணியொன்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் யுனிட்டி பில்டர்ஸ் நிறுவனம் மோசடியான முறையில் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மோசடி தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் இன்று அறிவித்தது.

ஆவணங்களைத் திரிபுபடுத்தி இந்த காணி பிரதிவாதியால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் துவான் நசீர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் குறித்த ஆவணங்கள், வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை நடத்திவருவதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை நடத்தி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *