உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வட கொரிய ஜனாதிபதியை சாதகமானதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்புவதாக ட்ரம்ப்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உனை சாதகமானதொரு சந்தரப்பத்தில் சந்திக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு அவசியமானதாயின் நிச்சயமாக இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிம் ஜொங் உன் கடுமையான சூழ்நிலைகளையும் இலகுவாக சமாளிக்கக்கூடிய திறமை மிக்க ஒருவர் என டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்பு தினம் (01) தெரிவித்திருந்தார்.

சர்வதேச தடைகளை மீறி வட கொரியா முன்னெடுக்கம் அணுசக்தி நடவடிக்கைகளினால் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் ட்ரம்புடனான சந்திப்பின் முன்னர் வட கொரியா சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டுமென வௌ்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரியா தமது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டுமென அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாகவும் வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தநேரத்திலும் ஏவுகணை பரிசோதனை நடத்தப்படும், என வடகொரியா  (01) ஆம்  அமெரிக்காவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வட மாகாண உண்மையினை மூடிமறைத்த விக்னேஸ்வரன்

wpengine

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த காதல் மனைவி!

Maash

மலேசியாவின் 7 ஆவது பிரதமராக 92 வயதான மஹதிர் முஹம்மட்

wpengine