Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கை பொருளாதார நிலை பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களிடம்  வினவியபோது பின்வருமாறு தனது கருத்தை வெளியிட்டார் இலங்கை பொருளாதார நிலை பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களிடம்  வினவியபோது பின்வருமாறு தனது கருத்தை வெளியிட்டார் அரசாங்கம் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகினாலும், தகுந்த பொருளாதார சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.

இலங்கை ஜனாதிபதியும் இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதர அபிவிருத்தி பற்றிக் கூறும் பிதற்றல்களை தூக்கியெறியும்வகையிலான கருத்தைபொருளியலாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இலங்கைப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் தீர்க்கமானநெருக்கடியின் பண்பையும்தீவிரமடையும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாடு பொருளாதார வங்குரோத்துநிலைக்குள் விழக்கூடிய அபாயம் உள்ளது.

இலங்கை கடந்த ஆண்டுகளில் அதிகம் கடன் பெற்றதனூடாகவே உயர்ந்த வளர்ச்சி வீதத்தை காட்டியதுஅது நிரந்தரமான வளர்ச்சிஅல்ல அவ் வளர்ச்சி  கீழிறங்கியுள்ளது,

அதிகரித்த கடன் பெறுவதால் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மேலும் விரிவடைந்ததோடு அது இறக்குமதி மற்றும் வர்த்தகப்பற்றாக்குறை அதிகரிப்பதற்கும் காரணமாகி உள்ளது

இலங்கை உள்ளடங்கலாக முன்னேற்றமடையாத நாடுகள்,விசாலமான கடன் பெறுதலினூடாகஅக்கடன்களை முக்கியமல்லாததுறைகளில் பயன்படுத்திவெள்ளை யானைகளை வளர்ப்பதன் மூலம்,தோன்றிய குமிழிகள் வெடித்து பொருளாதார நெருக்கடிக்குவழியமைத்துள்ளது கடன் வழங்குபவர்கள்வட்டி வீதங்களில் சிறிய மாற்றங்களுக்கு கூட ஒளி வேகத்தில் பிரதிபலிப்பதனால்குறுகியகால கடனை அடிப்படையாகக் கொண்டு அந்நிய செலாவனியை பராமரிக்கும் நாடுகள்தமது பொருளாதாரத்தை இயக்குவதுசம்பந்தமாக கவனமாக இருக்க வேண்டும்வர்த்தகக் கடனில் பெரிதளவும் இலங்கைப் பொருளாதாரம் தங்கியுள்து

இலங்கையின் உயர்ந்த பணவீக்க வீதம்அமெரிக்கா மற்றும் ஐரோப்பி ஒன்றியத்தில் காணப்படும் நூற்றுக்கு 1.5 விகித பணவீக்கவீதத்தை விட அதிகமாகவும்திறைசேரி ண்டியல் மற்றும் திறைசேரி முறிகளுக்காக குறுகியகால ஸ்திரமற்ற வெளிநாட்டுப் பணம்கிடைப்பதனால்,அதன் மீது அரசாங்கம் தங்கியிருக்கிறது.

அரசாங்கம் அல்லது கூட்டுத்தாபனங்கள் கடன்களை மீளக் கொடுப்பதற்கு இயலுமை உடையனவா இல்லையா என்பதைபொருட்படுத்தாது,குறைந்தகால கடன் பெறுதலின் மீதே தங்கியிருந்தால்கடன் வழங்குநர்கள் நம்பிக்கை தகர்ந்துகளத்தில் ருந்தேகாணாமல் போய்விடுவர்.

க் கருத்துக்களில் இருந்து வெளிப்படுவது என்னவெனில்,  முதலாளி வர்க்கத்தின் கனிசமான பிரிவினரிடையேஅரசாங்ககொள்கையின் காரணமாக வளர்ந்து வரும் அபாயம் பற்றி ஏற்பட்டுள்ள கவலை மற்றும் மகிழ்ச்சின்மையே ஆகும்.

சுயாதீனமான முதலாளித்துவ பொருளியலாளர்களான இவர்கள்இந்த தீர்க்கமான பொருளாதார நெருக்கடிக்குசமர்ப்பிக்கும் தீர்வு சர்வதேச நாணய நிதியமோ எகாதிபத்திய வங்கிகளோ முன்வைக்கும் யோசனைகளுக்கு அப்பாற்பட்டவைஅல்லஎனவேஇந்த நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதை இலக்காக கொண்ட யோசனைகளையே அவர்கள் மீண்டும்மீண்டும் வற்புறுத்திக் கூறி வருகின்றனர்.

எந்தளவு மக்களின் வெறுப்புக்கு உள்ளாகினாலும்தகுந்த பொருளாதா சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.செலவீனத்தைஅதிகரிப்பதற்கு முன்னர்வருமானத்தை அதிகரிக்க வேண்டும்இன்று நடப்பது யாதெனில்ஏற்படப்போகும் விளைவைப் பற்றிகவனிக்காதுவெளிநாட்டு வர்த்தக சந்தைகளில் கடன்பெற்று செலவு செய்வதே மக்கள் மீது மென்மேலும் வரிச்சுமையை சுமத்தவேண்டும் என்பதே இந்த விளக்கத்தின் அர்த்தமாகும்.

அரசதுறை நிறுவனங்களின் முகாமைத்துவத்தை அபிவிருத்தி செய்துசெயற்பாட்டை உயர்த்திவீண்  விரயம் , ஊழல், மற்றும் மேற் பூச்சுக்களையும் நிறுத்தவேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டை வரவழைக்கசமாதானம் மட்டும் போதாதுள்ளதுடன் நேர்மையான ஆட்சிசட்ட ஆட்சிதகவல் பெறும்உரிமைசெயற்பாடுநேர்மையான மற்றும் சுயாதீனமான அரச நிறுவனங்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்கள்சரளமான வரிமற்றும் குடிவரவு குடியகல்வு விதிகளும் அவசியம்.சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதில் ஏற்படும் பலவீனம் வெளிநாட்டுமூலதனத்தை ஈர்ப்பதற்கு பாதகமாக விளங்குகிறது

இங்கு மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு அரசாங்கம் கட்டியெழுப்பி வரும் இராணுவபொலிஸ் ஆதிக்க ஆட்சியானது, நீதி மற்றும்சமாதானத்தை பேணுவதும் நேர்மையான ஆட்சி மற்றும் நீதியின் ஆதிக்கமும் நேரடியாக மோதிக்கொள்கின்றனதமக்கு சார்பான,நீதித்துறையை  முழுமையாக அரசாங்கத்தின் கருவியாக்கிக் கொண்டுள்ள அரசாங்கம் மக்களை அடக்கி ஒடுக்க செயற்படுகின்றது

இலஞ்சம் மற்றும் வீண்விரயமும் அதன் அங்கமாக இருக்கும் அதேவேளைஇந்த நிலைமைகளின் கீழ் சுதந்திர ஊடகமும் சுயாதீனஅரச நிறுவனமும் இயங்க முடியாதுஆகையால்அரசாங்கம் தொடர்பாகவும் பொதுவில் முதலாளித்துவ அமைப்பு எதிர் கொண்டுள்ளதீவிரமான நெருக்கடி தொடர்பாகவும் பார்க்கும்போது, அதாவது .சுருங்கக் கூறின்நெருக்கடி மிக்க ஆட்சிநேர்மையானஆட்சியாக விளங்குவது சாத்தியமற்றதாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *