(சதாம்)
முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு அம்பாறை கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்கஹ அதற்கு பச்சைக் கொடியும் காட்டிவிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிமாக இருந்தும், அம்பாறை மாவட்டத்தில் 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் முஸ்லிம் காணியில் பௌத்த சிலை வைப்பதை தடுக்க முடியவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு ஜனாதிபதியையும், பிரதமரையும் விமர்சிக்கத் திராணியற்ற 2 முஸ்லிம அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீமினாலும், றிசாத்தினாலும் இதுவரை எதனையும் சாதிக்கமுடியவில்லை.
சிங்களத் தலைவர்களை நக்கிப்பிழைத்து, தமது அமைச்சு பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கும் இவ்விரு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலில் முஸ்லிம் சமூகம் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்ட வேண்டும்.
உரிய இடங்களில் ஹக்கீமும், றிசாத்தும் கதைத்து இருப்பார்களாயின் முஸ்லிம் பிரதேசங்களை சுவீகரித்து சிலை நிறுவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முயற்சி நிறுத்தப்பட்டிருக்கும்.
அறிக்கைகள் மூலமாக முஸ்லிம் சமூகத்திடம் உயிர்வாழும் இந்த 2 அரசியல்வாதிகளும் முஸ்லிம் பிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புத்தர் சிலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அம்பாறை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.