Breaking
Mon. Nov 25th, 2024

ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தைவழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்விஎழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.

இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

 

ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் டபுள் ப்ரோமோஷன் வழங்கப்பட்டுள்ளதுநல்லாட்சி பங்காளிகளில்ஒருவரான  ஞானசார தேரர் அவரது வேலையை அரச உயர் மட்டத்தில் இருந்து தற்போது செயல்படுத்தி வருவதுதெளிவாக தெரிகிறது. 

மஹிந்த ராஜபச்ஷ காலத்தில் ஊர் ஊராக கத்தித் திரிந்தவர் இப்போது அரசாங்கத்தின் உயர் மட்ட கூட்டங்களில் பிரதான பாத்திரம் ஏற்று கலந்துகொள்கிறார்அதிகாரிகளை மிரட்டுகிறார்கட்டளையிடுகிறார்.ஜனாதிபதிசெயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் அவருக்கு முன்வரிசை வீ ஐ பி ஆசனம் வழங்கப்படுகிறது.

மஹிந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுஅவரது கோரிக்கைகளும்தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.வில்பத்து விவகாரத்தில் இருந்து இறக்காமம் மாணிக்கமடு விடயம்வரையில் அவர் தலையிடும் அளவுக்கும் விடயம் கைமீறி போய் உள்ளது.

குடிவரவு திணைக்களத்துக்கு சென்று அவர் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய தற்போது வெளிநாடுகளில் இருந்துவரும் முஸ்லிம்களின் வீசா கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இனிமேலும் நாம் பொறுமை காக்க கூடாது,பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவை கிழித்துஎரியுந்துவிட்டு தைரியமாக உலவும் அளவுக்கு அவருக்கு இந்த நாட்டில் அதிகாரங்களை வழங்கியது யார் எனஅரசாங்கத்தில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் எனபானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *