பிரதான செய்திகள்

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலக தொழிநுாட்ப உத்தியோகத்தர் விபத்தில் மரணம்

மன்னார் அடம்பன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மாந்தை மேற்கு பிரதேசச்செயலக தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான 32 வயதுடைய துரைரெட்னம் ரட்னகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளம் குடும்பஸ்தரான தொழில் நுற்ப உத்தியோகஸ்தர் நேற்று இரவு அடம்பன் பகுதியில் இருந்து மன்னாரில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே அடம்பன் பகுதியில் மரம் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு அடம்பன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளுார் அரசியலில் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளையும் சமப்படுத்திக்கொண்டு நகர்வு

wpengine

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை! விஷேட அதிரடிப்படையினர் களத்தில்

wpengine

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

wpengine