(ஏ. எச். எம். பூமுதீன்)
மு.கா தலைவராக ரவூப் ஹக்கீம் பொறுப்பேத்ததன் பின்னர் இதுவரை இருபத்தி மூன்று பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பேரியல்,அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ்,ரிஷாத் பதியுதீன் என்று ஆரம்பித்த வெளியேறல்கள் இன்று ஹசன் அலி, அன்சில் வரை வந்தடைந்துள்ளது.
மு.காவை ஆரம்பித்த மர்ஹூம் அஷ்ரபின் மனைவி பேரியல்- கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோரும் இந்த வெளியேறல்களில் இடம்பெற்றுள்ளதுதான் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.
மு.காவில் இருந்து ரிஷாத் வெளியேறியதன் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரசை உருவாக்கி இன்று மு.காவை விஞ்சும் அளவுக்கு அவரது தலைமைத்துவம் முஸ்லீம் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முகா பிரதிநிதிகளை- மு.காவை விட்டு வெளியேறுமாறும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையுமாறும் அவர்களது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதுதான் யதார்த்தம்.
இதனை மூடி மறைக்க , றிஷாத்தான் முகா பிரதிநிதிகளை தன் பக்கம் இழுக்கின்றார் என முகாவின் புதிய தவிசாளரான முழக்கம் மஜீத் முட்படுவதை நோக்கும்போது அவர் மீது பரிதாபமே ஏட்படுகின்றது.
ஹஸனலி, அன்ஸில், தாஹிர்,தாஜுதீன் போன்ற முகா உயர் பிரமுகர்களின் கூட்டங்கள் றிஷாத்தின் அனுசரணையில்தான் நடக்கின்றது என்ற முழக்கத்தின் அறிக்கை மேட்படி விடயத்துக்கு சான்றாகும்.
நோர்வே அரசிடம் ரவூப் ஹக்கீம் 30 கோடி வாங்கியதாக முழக்கம் மஜீத் தன்னிடம் கூறினார் என்ற அன்ஸிலின் கருத்துக்கு பொருத்தமான பதிலை வழங்காது , இதட்குள் ரிஷாத்தை வம்புக்கு இழுப்பது அரசியல் அநாகரிகமாகும்.
தவிசாளராக நியமிக்கப்பட்டதுக்கு ஏதோ ஒரு அறிக்கை விடவேண்டும், தன்னையும் ஒரு அரசியல் முக்கிய புள்ளியாக மக்கள் முன் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்தில் முழக்கம் அந்த அறிக்கையை விட்டுள்ளார்.
இதனை நோக்கும்போது, “நானும் ரவுடிதான்”, ” நானும் ரவுடிதான்” என்ற
நடிகர் வடிவேலுவின் காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.
ஹஸனலி, அன்ஸில், தாஹிர்,தாஜுதீன்
போன்றோர் முகா தலைவருடன் ஒன்றோடு ஒன்றாக கலந்து பழகியவர்கள் என்ற ரீதியில் அவர்கள் சில உண்மைகளை வெளிப்படுத்துவதை முகா போராளிகள் உட்பட அரசியல் கலக்காத நடுநிலைவாதிகளும் அங்கீகரிப்பது முகாவுக்கு பாரிய பின்னடைவை நாடு பூராவும் ஏட்படுத்தி வருகின்றது. இது மறுபக்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு செல்வாக்கை உயர்த்துகின்றது.
இதனை தடுக்க அல்லது மூடிமறைக்கவே ஹஸனலி தரப்பை , ரிஷாத் பதியுதீனுடன் முடிச்சிப்போட முழக்கம் முயல்வதை மக்கள் அறியாமல் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, இனிவரும்காலங்களில் ஹஸனலி தரப்பினரின் குற்றச்சாட்டுக்களுக்கு பொருத்தமான பதில்களை வலுங்குமாறும் வீணாக அமைச்சர் ரிஷாத்தை வம்புக்கு இழுப்பதை தவிர்க்குமாறும் நான் கோரவில்லை– மாறாக மக்கள் கோருகின்றனர்..