உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் மர்மமான முறையில் கொலை

நியூயார்க், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஷீலா அப்துஸ் சலாம். கடந்த வாரத்தில் காணாமல் போன இவரை போலீசார் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லீம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

மேலும் இவர் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

Maash

சவூதி அரேபியா சென்ற ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக வந்த சோகம்!

wpengine

ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும்

wpengine