பிரதான செய்திகள்

மருதமுனை எலைட் சாம்பியனாக தெரிவு

மருதமுனை கிரிக்கெட் சங்கம் மற்றும் மருதமுனை சப்னாஸ் ஆடையகத்தின் அனுசரணை உடன் மருதமுனை மிமா விளையாட்டு கழத்தினால் மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட்மைண்ட் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மருதமுனை எலைட் விளையாட்டு கழகம் 14.04.2017 இன்று மோதியது.

பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இப்பபோட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய எலைட் 10 ஓவர் நிறைவில் 111 ஓட்டங்களை பெற்றது. எலைட் சார்பாக சிபார் அரைசதம் விளாசினார். பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கோல்ட்மைண்ட் அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களையே பெற்றனர். அந்த வகையில் எலைட் அணியினர் 26 ஒட்டங்களினால் மிமா 2017 கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்

எலைட் அணியினருக்கு வாழ்த்துக்கள்

Related posts

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine

மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை-அமைச்சர் ரமேஷ் பத்திரன

wpengine

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் சத்தியப்பிரமாணம்

wpengine