Breaking
Mon. Nov 25th, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம்  பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ள மாவில்லு பேணற் காடு வன பிர­க­ட­னத்தை வாபஸ் பெற்­றுக்­கொண்டால் வில்­பத்­துவில் சுமார் ஒரு இலட்சம் ஏக்­க­ருக்கும் மேற்­பட்ட வன­பி­ர­தேசம்  அழி­வுக்­குள்­ளாகிவிடும். நாட்டுப்பற்­றுள்ள, சூழல் பற்­றுக்­கொண்ட பௌத்த மகா சங்கம் இதற்கு ஒரு போதும் இட­ம­ளி­யாது என மகா சங்­கத்தின் செய­லாளர்  ஆனந்த  சாக­ர­ தேரர் தெரி­வித்­துள்ளார். 

ஜனா­தி­ப­தியின் மாவில்லு பேணற்­காடு வன­ப்பி­ர­க­டனம்  தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யிலே அவர் இவ்­வாறு  குறிப்­பிட்­டுள்ளார்.

அறிக்­கையில் அவர் மேலும்  தெரி­வித்­துள்­ள­தா­வது;

வில்­பத்து வன பிர­தேசம் மக்­களின் வாழ்­வி­டங்­க­ளல்ல என்­பது 1960 ஆம் ஆண்டின்  இலங்­கையின் வரை­ப­டத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கூகுல் வரை­படம், ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்தின் பதி­வுகள் என்­ப­னவும் அங்கு மக்கள்  வாழ­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் சிவில் அமைப்­பு­களும் அப்­பி­ர­தே­சங்­களில் மக்கள் வாழ்ந்­துள்­ளார்கள் என்­பதை  தவ­றாக நியா­யப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

இதே­வேளை 2012 ஆம் ஆண்டின் வன­பி­ர­க­டன வர்த்­த­மானி அறி­வித்­த­லையும்  2017 ஆம் ஆண்டின் மாவில்லு பேணற்­காடு வன பிக­ர­ட­னத்­தையும் ஜனா­தி­பதி வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்றன. ஜனா­தி­ப­தியின் வனப் பிர­க­டனம் நியா­ய­மா­னதே. அவர் இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை வாபஸ் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது          என்­பதே எமது   நிலைப்­பா­டாகும்.

அமைச்சர் ரிசாதின் சூழ்ச்­சி­க­ளுக்குள் ஜனா­தி­பதி சிக்கிக்  கொள்­ளக்­கூ­டாது.  இது தொடர்பில் விரைவில்  ஜனா­தி­ப­திக்கு மகஜர் ஒன்­றினைக் கைய­ளிக்­க­வுள்ளோம்.

ஜனா­தி­பதி வில்­பத்து பிர­தே­சத்­துக்கு நேரில் விஜயம் செய்து  உண்­மை­யான கள நிலை­மை­களை அவ­தா­னிக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்.

தமிழ் –  சிங்­கள புத்­தாண்டு விடு­மு­றையின்  பின்பு ஜனா­தி­பதி வன பிர­க­ட­னத்தை வாபஸ் பெற்­றுக்­கொள்ளக்கூடாது.

எவ்­வித திருத்­தங்­க­ளையும் மேற்­கொள்ளக் கூடாது என வலி­யு­றுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும்  நடத்தவுள்ளோம்.

முள்ளிக்குளம் பகுதியில் எமக்குப் பிரச்சினையில்லை. ஏனைய பகுதிகளே பிரச்சினைகளுக்குள்ளான இடங்களாகும். வில்பத்து வனம் அழிக்கப்படுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *