வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்கள் காணிகளில் மீள்குடியேற்று நடவடிக்கை போராட்டத்திற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இந்து மத விவகார மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகளில் இராணுவ பயன்பாட்டில் உள்ள நிலையில் அதற்காக பகுதிகளுக்காக மக்களை செல்ல தொடர்பாக கலந்துரையாடலை நடத்த தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மூப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், வடக்கு கிழக்கில் பிரதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஐாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் அழைக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
இதனூடாக நாம் எதிர்பார்க்கின்றோம் சில இடங்கள் விடுவிக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
எந்த இடங்கள் எப்பொழுது வழங்க முடியும் என செய்தியினை மக்களுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
பாதுகாப்பு அமைச்சுடன் கதைத்து அதற்காக தீர்வினை பெற்றுக்கொடுப்பேன்.
இது தொடர்பாக ஊடகவியாளர்கள் பொருத்து வீடுகள் என்ன நிலையில் இருக்கின்றது என்று கேள்வி கேட்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
65,000 வீட்டுத்திட்டத்தில் 6000 வீடுகளை கட்டுவதற்கு 76 ஆயிரம் பேர்கள் எனக்கு கடிதம் மூலமாக கடிதங்கள் எழுதியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் நாங்கள் இந்த வீடுகளை கட்டிக்கொடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.
மேலும் ஊடகவியாளர்கள் கேள்வி கேட்டபோது அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அரசாங்கத்தின் சட்ட ரீதி இருக்கின்றது.
எல்லா அரசியல் கைதிகளும் மனுக்களை கொடுத்து இருக்கின்றார்கள். இதற்காக தீர்வினை உடனடியாக செய்ய முடியாது.
அதற்காக சட்ட பூர்த்தி செய்ய பின் தான் அவர்களை விடுவிக்கமுடியும் என அவர் தெரிவித்தார்.