பிரதான செய்திகள்

காணி விடயத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அநீதி அமைச்சர் றிஷாட் ஆராய்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என். எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட முன்னால் அரசியல்வாதி தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு சில அரசியல்வாதிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்தார்.

பல முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டும் இற்றைவரை அவர்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதன் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சர் றிஷாட் தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.

Related posts

பாடசாலை மாணவர்களின் இலவச சீருடைத் துணி விநியோகம் 80% நிறைவு!

Editor

“தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை”

wpengine

நாடாளுமன்றம் இவற்றையும் பொறுப்புடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்

wpengine