(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை 12ஆம் திகதி புதன்கிழமையும் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறவிருப்பதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இவ்விரு தினங்களிலும் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இந்நேரமுகப் பரீட்சை இடம்பெறும் எனவும் கல்வித் பொதுத் தராதர பரீட்சைப் பெறுபேறு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பதாரிகளை சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
இக்கல்லூரியில் ஐந்து வருட மௌலவியா கற்கை நெறியுடன் க.பொ.த.உயர் தர கலைப்பிரிவு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவிகள் அனைவரும் சித்தியடைவதுடன் அவர்களுள் பெரும்பாலானோர் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றுக்கொள்கின்றனர்.
2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் இருந்து இவ்வருடம் முதற்தொகுதி மாணவிகள் ஆறு பேர் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ள அதேவேளை அவர்களுள் நால்வர் தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் உயர்கல்வியைத் தொடர்கின்றனர் என அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி மேலும் குறிப்பிட்டார்.