பிரதான செய்திகள்

வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் -ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டின் வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வில்பத்துவை பாதுகாப்போம் என்ற அமைப்பு ஜனாதிபதியிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் சூழல் பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை வாழ் பிரஜைகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என சர்ச்சைக்குறிய ஆனந்த தேரரின் இயக்கப்படும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை.

கடந்த சில நாட்களாக தங்களால் மேற்கொள்ளப்பட்ட தமது நடவடிக்கைகளினால்,பதியுதீனின் குடும்ப நிறுவனத்துக்கு வில்பத்துவில் வீடுகளை நிர்மாணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புத்தாண்டு வாரத்தில் வன பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறையில் சென்றவுடன் வில்பத்து, தப்போவ, வீரக்குளிச்சோலை மற்றும் கல்லாறு வனப் பிரதேசங்களில் மரங்களை வெட்டுவதற்கு பாரிய திட்டமிடப்பட்டுள்ளதாகவுன் இதற்கு வன பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு  குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

இன்று காலை தலைமன்னார் பிரதான விதியில் வாகன விபத்து! ஓருவர் உயிர் இழப்பு

wpengine

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது

wpengine

“மக்கள் சேவைக்காகவே உருவான கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்”

wpengine