உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விஷ வாயுத் தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகள்

சிரியாவில் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்ற விஷ வாயுத் தாக்குதலின் பின்னராக சம்பவங்கள் தற்போது வௌியாகி வருகின்றன.

இதன்படி, சிரியாவிலிருந்து வௌியாகியுள்ள ஒரு புகைப்படத்தினால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவர் இந்த தாக்குதலினால் தனது முழு குடும்பத்தையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி, இரண்டு குழந்தைகள், இரண்டு சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என அனைத்து சொந்தங்களையும் இழந்து அப்துல் ஹமீது அல்யூசுப் நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளார்.

9 மாதங்களே ஆன தனது இரட்டை குழந்தைகளையே அவர் இழந்துள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.

உயிரிழந்த தனது இரண்டு குழந்தைகளையும் தனது நெஞ்சுடன் அரவணைத்து கதறி அழுகின்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் அதிகளவில் பரவி வருகின்றன.

இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கொடூர சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என சிரிய மக்கள் எதிர்பார்த்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related posts

அமைச்சர் ஹக்கீமின் தாயாரின் ஜனாஷா நல்லடக்கம் நாளை

wpengine

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

இலஞ்சம் வாங்க மறுத்த யாழ் சாவகச்சேரி பொலிஸ் அதிகாரிக்கு சன்மானம்!

Editor