பிரதான செய்திகள்

பண்டிகை காலம்! சதொச விற்பனை நிலையங்களில் விசேட விலைச் சலுகை

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

ஒரு கிலோ பருப்பு, 500 கிராம் உருளைக்கிழங்கு, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் அரிசி, 500 கிராம் கருவாடு, ஒரு கிலோகிராம் சீனி, 425 கிராம் பொதிசெய்யப்பட்ட மீன், 200 கிராம் துண்டு மிளகாய், 500 கிராம் பாசிப்பயறு மற்றும் 400 கிராம் பால்மா அடங்கிய பொதியே 975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Related posts

“பெண்கள் விற்பனைக்கு உண்டு” என பேஸ்புக் பக்கம்

wpengine

பிரியந்த குமாரவின் மரணம் நீதியைப் பெற்றுத்தருமாறு ஐ.நா சபையை நாம் வலியுறுத்துகின்றோம்.

wpengine

2016, 2017ஆம் கல்­வி­யாண்­டுக்­கான பாட­நெ­றிகள் ஒக்­டோபர் மாதம் ஆரம்பம்

wpengine