பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்-எஸ்.பி

நாட்டிற்குள் காணப்படும் சிக்கலான நிலைமையில், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது மிகச்சிறந்த விடயம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது சகல தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையடியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

Related posts

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை மாணவர்களுக்கு தொழில் சார் கற்கை நெறி!-கல்வி அமைச்சர்-

Editor

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை. வவுனியாவில் தொடர்ந்தும் தாமதம்

wpengine

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண் நாட்டிற்கு விஜயம்!

Editor