பிரதான செய்திகள்

வடமாகாண பாடசாலைகளுக்கு வரவு பதிவு கணிப்பு இயந்திரம்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர் வரவினை பதிவுச் செய்வதற்குநேரக் கணிப்பு இயந்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம்,இரண்டாம் தவணையில் இருந்து கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், முன்னதாக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும்இளைஞர் விவகார அமைச்சு அறிக்கை ஒன்றை பின்வருமாறு வெளியிட்டிருந்தது.

வட மாகாணத்தில் உள்ள தேசிய மற்றும், மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார்மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் வரவை பதிவு செய்யும்இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் தவனையில் இருந்த இந்த திட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை அபிவிருத்திக் குழு நிதிஅல்லது உள்ளீட்டுக்கான நிதியை பயன்படுத்த வேண்டும்.

பாடசாலைகளில் இயந்திரப் பயன்பாடு தொடர்பான தரவுகளை கோட்டக் கல்வி அலுவலகங்கள்ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர் பெற்று அதனை இந்த மாதம் 19ம் திகதிக்குமுன்னர், அறிக்கையிடல் வேண்டும் என அமைச்சின் செயலாளர் அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

wpengine

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

சுவாமி நாராயணன் கோவிலில் ”சாதிக் கான்”

wpengine