பிரதான செய்திகள்

வடமாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச

வடமாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த கிராமங்களில் 2500 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான 1267 மில்லியன் ரூபாய் செலவிடவிடப்படவுள்ளது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுல்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் நலன் கருதி இந்த வேலைத்திட்டம் அமுற்படுத்தப்படுகிறது.

Related posts

பாதுகாப்பின்றி சாதாரண நபர் போன்று கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

wpengine

வறட்சி நிவாரணம்! மக்களை வேலை வாங்கும் கிராம அதிகாரிகள்

wpengine

வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! றிஷாட்,விக்கி பங்கேற்பு

wpengine