Breaking
Sun. Nov 24th, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

அ. இ. ம.காவில் இருந்து விலகி முகாவில் இணைந்துள்ள முன்னாள் எம்பி ஹுனைஸ் பாரூக்குக்கு புதிய பொறுப்பொன்றை முகா வழங்கியுள்ளது.

தேசியப்பட்டியலை எதிர்பார்த்து சென்ற அவருக்கு இதுவரை அரசியல் அல்லது கட்சி ரீதியில் எந்தவித உயர் பதவியையும் வழங்காத நிலையில்தான் குறித்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

“பொதுக் கூட்டங்களில் ரிஷாத்தை விமர்சிப்பவர்” என்பதுதான் ஹுனைஸுக்கு, முகா தலைவரினால் வழங்கப்பட்டுள்ள அந்த புதிய பொறுப்பாகும் என்கின்றனர் முகா உயர் பீடத்தினர்.

முகாவின் பொதுக் கூட்டங்கள் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் ஹுனைஸ் சென்று ரிஷாத்தை விமர்சிக்க
வேண்டும் என்பதுதான் அப்புதிய பொறுப்பின் பணியாகும் என கூறப்படுகின்றது.

முகாவின் முசலி கூட்டத்தில் அண்மையில் உரையாற்றியதன் பிட்பாடு நேற்று கல்முனை முகா கூட்டத்திலும் உரையாற்றி கட்சி தலைமையின் பணிப்புக்கமைய ரிஷாத்தை, பொய்களை அடுக்கி விமர்சித்தார்.

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெட்ட ஜனாதிபதியின் செயலருடனான சந்திப்புக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி , இதன் பின்னணியில் ரிஷாதுக்கு உள்நோக்கம் இருக்கும் என்றெல்லாம் தனது கட்பனை வளத்தை கொட்டி தீர்த்திருந்தார்.

வில்பத்துவில் எந்தவொரு பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்று முசலி கூட்டத்தில் கூறிய ஹுனைஸ், ஜனாதிபதியின் வர்த்தமானியில் மூக்குடைபட்டு போனதை மறைக்க நேற்று கல்முனையில் வைத்து எனக்கு அழைப்பில்லை என்று கூறி தடுமாறி நின்றார்.

வில்பத்துவில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறிய உங்களை எதட்காக அழைக்க வேண்டும்?

அது ஒருபுறமிருக்க, வன்னி மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இந்த ஹுனைஸ் பாருக். வேட்பாளர் பட்டியலில் ஹுனைஸால் டம்மியாக போடப்பட்ட மஸ்தானை மக்கள் தெரிவு செய்து ஹுனைசெய் தோற்கடித்தனர். அதுவும் வெறும் 3000 வாக்குகளை மட்டும் அளித்து நான்காவது இடத்துக்கு பின்தள்ளினர்..

இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கும் ஹுனைஸை ஜனாதிபதியின்
கூட்டத்துக்கு ஏன் அழைக்கவேண்டும் என்ற இரண்டாவது நியாயமான காரணமும் மறுபக்கம் உண்டு என்றால் அதனை ஹுனைஸ் மறுதலிக்கமாட்டார்.

முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் வில்பத்துவுக்குள் உள்வாங்கப்படும் பிரச்சினை என்பது ரிஷாதுக்கு மட்டும் உரித்தான பிரச்சினை அல்ல. மாறாக, முழு நாட்டு முஸ்லிம்களினதும் பிரச்சினை.

முசலி மக்களுக்காக ஜனாதிபதியை சந்திக்க ரிஷாத் முயட்சி எடுப்பது ஒருபக்கமும், ஆர்ப்பாட்டம் மறு பக்கமுமாக இடம்பெறும்போது முன்னாள் எம்பியும் முசலியில் பிறந்தவருமான இந்த ஹுனைஸ் அவர்கள் உல்லாசமாக கல்முனைக்கு வருகின்றார் என்றால் அதன் அர்த்தம் என்ன?

முசலி மக்களை விட அமைச்சர் ரிஷாத்தை விமர்சிக்க வேண்டும் என முகா வழங்கியுள்ள பொறுப்புதான் அவருக்கு மேலாகப் பட்டுள்ளது.

முகாவின் அடுத்தடுத்த கூட்டங்களிலும் ஹுனைஸ் அவர்கள் இல்லாதபொல்லாத கட்பனைகளை ரிஷாதுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடுவதை கேட்பதட்க்கு
ஆவலாக உள்ளோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *