பிரதான செய்திகள்

வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி! முசலி பிரதேச மக்கள் பாரிய போராட்டம்

முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி பிரதேச மக்கள் இன்று வௌ்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக பிரதேச மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முசலி பிரதேசத்திலுள்ள 22 கிராமங்களின் மக்களும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களே காடுகளாக மாறியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் தமது வீடுகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மரிச்சுக்கட்டி, பலைக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி, அகத்திமுறிப்பு மற்றும் வேப்பங்குளம் ஆகிய பிரதேசங்களே, ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine

24 மணி நேரத்தில் 162 தேர்தல் முறைப்பாடுகள்..!

Maash

ஹக்கீம் கும்பிடு படம்! SLTJ எதிர்ப்பு வரும் என்றால் மார்க்கத்தை சொல்லமாட்டார்கள்.

wpengine