Breaking
Sun. Nov 24th, 2024
(நியாஸ் கலந்தர்)

கோழிகள் கூவி பொழுதுகள் விடிவதில்லை என்பதை போல் சகோதரர் வை.எல்.எஸ்.ஹமீட் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வசை பாடுவதனால் அமைச்சருக்கு எதுவும் குறையப் போவது இல்லை.சக்தி தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ரங்கா நடத்தும் அரசியல் நாடகமே மின்னல் எனும் அரசியல் நிகழ்ச்சி என்பது நாடறிந்த உண்மையாகும்.ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதிற்கு ஏற்ப அந் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பேச வேண்டும் என்பது நிகழ்ச்சியின் விதியாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சி மீண்டும் ஒரு முறை வை.எல்.எஸ்.ஹமீட்டை வைத்து அமைச்சர் றிஷாட்டிற்கு எதிரான கட்டுக்கதைகளுடன் ரசிகர்களுக்கு இனிமை வழங்க ரங்காவினால் தயார் செய்யப்பட்டிருந்தது.வழமை போலவே ஹமீத் மனதில் இருந்த ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்.அனுபவித்த சுகபோகங்கள் இல்லாமல் போன பிறகு மனிதனாகப் பிறந்த யாருக்குதான் மன உளைச்சல் வராமல் இருக்கும்.எனவே தான் தனது மனதில் உள்ள கவலைகளை தீர்த்துக் கொள்ள வேண்டு மென மின்னல் நிகழ்ச்சிக்கு அவ்வப்போது வந்து செல்கின்றார்.

ஹமீத்தை பொறுத்த வரையில் அவரின் அரசியல் பயணம் எப்போதும் மக்களை நோக்கியதாக இருந்ததில்லை.தான் ஆடம்பரமாகவும்,சொகுசாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே அரசியலை அன்றும் இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்திலிருந்து அரசியல் முன்னெடுப்புகளை செய்யும் ஹமீத் இதுவரை மக்களுக்கு அரசியல் ரீதியாக செய்த ஒரு நல்ல காரியத்தையாவது கூற முடியுமா?தானும் குடும்பமும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என எப்போதும் நினைத்திருப்பவர் ஹமீத்.எண்ணத்தை கொண்டு இறைவன் ஆட்சி அதிகாரங்களை கொடுப்பான்.ஹமீத்தின் கறைபடிந்த மனதிற்காகவே அவருக்கு எப்போதும் அரசியல் அதிகாரம் கிடைத்ததில்லை.அது இறைவனின் ஏற்பாடாகக் கூட இருக்கலாம்.

அமைச்சர் றிஷாட் வழங்கிய நிறுவன தலைவர் பதவி மூலம் ஹமீத்தும் அவருடைய குடும்பமும் மட்டுமே வாழ்ந்து வந்தது.சாப்பிடும் கையால் காக்கா விரட்ட மறுப்பவர்களை போன்றே அரச நிறுவனங்களின் தலைவர் பதவியை ஹமீத் பயன்படுத்தி வந்திருந்தார்.தனது குடும்ப உறுப்பினருக்கு வேலை வாய்ப்பு,கார்,சொகுசு வீடூகள் என தனது குடும்ப வட்டத்துக்குள்ளே எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டார்.சுயநலப் போக்கை மட்டும் எப்போதும் தன் வாழ்வில் கடைப்பிடித்து வரும் ஹமீத் தற்போது அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக கட்டுக்கதைகள் கூறுவதும் சுய நலத்திற்காகவேயாகும்.

ஹமீத் சரியான அணுகுமுறையை கையாண்டிருந்தால் அ.இ.ம.கா செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டியநிலை ஏற்பட்டிருக்காது.பிழைகளை தன்வசம் வைத்துக் கொண்டு மற்றவரை பிழை கூறித்திரிவது எந்த வகையிலும் நியாயமாகாது.ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இவ்வாறு அபாண்டங்களை சுமத்தி அலைந்து திரிவதை கண்டு கவலையடைவதை தவிர மக்களால் வேறு நிவாரணங்களை வழங்க முடியாது.அரசியல் பயணத்தை சுயலாபத்திற்காக தொடர நினைக்கும் ஹமீத்தை போன்றவர்களை மக்களும் ஒரு காலமும் ஆதரிக்க போவதும் கிடையாது.

அமைச்சர் றிஷாட் மீது நீங்கள் கூறும் கட்டுக்கதைகளை கேட்டு மக்களுக்கு புளித்து விட்டது.ஹமீத்தை கண்டாலே அமைச்சர் றிஷாட்டை கழுவ வந்திருக்கிறார் என கூறும் அளவிற்கு  அவரின் நிலை சென்றடைந்திருக்கிறது.ஹமீத் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அமைச்சர் றிஷாட்டை கழுவி திரிவதனால் கண்ட பயன் எதுவும் இல்லை.சில நேரம் ஹமீத் பேசுவதெல்லாம் மலையினை பார்த்து குரைப்பதை போல் ஆகிவிடும்.அரசியல் பயணத்தை முடிக்கும் காலகட்டத்தில் இருக்கும் ஹமீத் இனிவரும் காலத்திலாவது தன்நிலை மாற்றிக் கொள்வாரா?மாற்றிக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *