Breaking
Mon. Nov 25th, 2024

(கூட்டு எதிர்க்கட்சி ஊடகப்பிரிவு)

களுத்துறை,பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோய் மிக அதிகமாக பரவி வருகின்ற போதும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது மாவட்ட மக்கள் என்ற அடிப்படையில் கூட அந்த மக்களுக்கு  எந்த விதமான உதவிகளையும் செய்யாதுள்ளார். என நேற்று 20-03-2017ம் திகதி திங்கள் கிழமை பேருவளை முஸ்லிம்களுடனான சந்திப்பின் போது களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசந்த தெரிவித்திருந்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்

 

அண்மைக் காலமாக  களுத்துறை,பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகின்றது.முஸ்லிம்கள் செறிந்து வாலும் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவிலும் டெங்குவின் தாக்கம் அதிகமுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்படியான ஒரு சம்பவம் மஹிந்த ராஜ பக்ஸவின் காலத்தில் இடம்பெற்றிருந்தால் இது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்ற கதையை பரப்பி சிலர் அரசியல் இலாபம் பெற்றிருப்பார்கள்.அப்படி செய்து சிலர் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 145000 வாக்குகளை பெற்றிருந்தார்.இதில் பெருமளவான முஸ்லிம் வாக்குகள் உள்ளன.இப் பிரச்சினையின் போது இம் மாவட்ட மக்களுக்கு தனக்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையிலும் தான் சுமந்துள்ள அமைச்சுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற அடிப்படையிலும் இரு வகையில் சேவையாற்ற வேண்டிய கடமை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்குள்ள போதும் அவர் இது வரை இம் மாவட்ட மக்களை ஏரெடுத்தும் பார்க்கவில்லை என இம் மக்கள் தங்களது கவலையை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

 

இது வரை பேருவளை சீனன் கோட்டையை சேர்ந்த மூவர் மரணித்துள்ளனர்.இதனை சாதாரணமாக நோக்க முடியாது. டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுப்பதற்காக விசிறப்பட்ட புகை உட்பட பல நடவடிக்கைகளுக்கு இங்கு வாழும் மக்களின் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது.இப்படியான விடயங்களை ஒழுங்கு செய்து தர வேண்டியது ஒரு அரசின் கடமையல்லவா? இந் நாட்டின்  சுகாதாரா அமைச்சரின் கடமையல்லவா? ஏன் இவர்கள் இத்தனை கரிசனையற்று இருக்கின்றார்கள் என தெரியவில்லை.மிக விரைவில் இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் கதைப்பேன் என்ற உறுதி மொழியை இவ்விடத்தில் தருகின்றேன் என தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *