Breaking
Mon. Nov 25th, 2024

(அஷ்ரப். ஏ. சமத்)

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தையில் 21வது மாதிரிக் கிராமம் பண்டாரகமவில் ”வீதியபண்டாரகம”  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினாவில் மக்களிடம்  கையளிக்கப்பட்டது.அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் ஆலோசனைக்கேட்ப தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாடு முழுவதிலும்  வீட்டற்றவா்களுக்காக நாடுமுழுவதிலும் 347 மாதிரிக்கிராமங்களை நிர்மாணித்து வருகின்றாா்.


இதுவரை 24 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு  திறந்து வைத்து மக்களிடம்கை யளிக்கப்பட்டுள்ளன.இவ் வீடமைப்புக்கிராமங்களில் அரச காணிகள் 10-20 பேர்ச் வழங்கப்பட்டு அக்காணிகள் மக்கள் பங்களிப்போடு 25 வீடுகளும் நிர்மாணிக்கபட்டு, குடிநீர்,  உள்ளக பாதைகள், மின்சார போன்ற அடிப்படை  வசதிகளுடன் இக் கிராமம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு கருத்து தெரிவித்த  அமைச்சா் சஜித் பிரேமதாச

களுத்துறை மாவட்டத்தில் வீடடற்ற குடும்பங்களுக்கு 45 இலட்சம் ருபா செலவில்  இவ் வீடுகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.   தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு   குறைந்த வட்டியான 6 வீதத்தில்  3 இலட்சத்து 50 ஆயிரம் ருபா வீடமைப்புக் கடனும் வழங்க்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ஒரு வீடமைப்புக் கிராமம் திறக்கப்படும்போது  அந்த பிரதேசத்தில் வாழும் 1000 இளைஞா் யுவதிகளுக்கு மேசன் தச்சு சுயதொழில் பயிற்சிஅளிக்கப்பட்டு அதற்கான ஆயுதங்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வாழும் முதியோறுக்கு இலவசமாக பரிசீலிக்கப்பட்டு மூக்குக் கண்னாடிகள், அத்துடன் சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் என பல்வேறு மனிதபிமான சமுக சேவைகளும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *