பிரதான செய்திகள்

இலங்கையில் தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்ள ஹொங்கொங் நிறுவனங்கள் இரு தரப்பு கலந்துரையாடல்

(ஆ.ஹசன்)
ஹொங்கொங் நாட்டின் பிரபல  Haier மற்றும் Inspur நிறுவனங்கள் இலங்கையில் தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்வது குறித்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டன.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்  Haier நிறுவனத்தின் பணிப்பாளர் பிரான்க் ஹுவாங், Inspur நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர்களான ஜெஸீகா சன், பிரான்ங் மீன்ங், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நிப்ராஸ் மொஹமட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் தொழில்நுட்ப வாசிகசாலை என்பன நிர்மாணிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன்,  இக்குழு நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைகழக வளாகத்துக்கு விஜயம் செய்யவும் தீர்மானித்தது.

அத்துடன், புதிய தொழில்நுட்ப முறைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. 

Related posts

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

Editor

24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழப்பு..!

Maash

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு செயலமர்வு

wpengine