பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர்

முச்சக்கரவண்டிகளுக்கான நியமம் அடங்கிய மீற்றர் கருவியை இலவசமாக ​பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் வாடகை  போக்குவரத்துக்குப் பயன்படுத்தபடும் முச்சக்கர வண்டிகளில், ​உள்ள மீற்றர்களில்  காண்பிக்கப்படும் அளவீடுகள் மற்றும் அறவிடப்படும் பணம் என்பன ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை.

இது குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஒரே  நியமம் அடங்கிய மீற்றர் கருவியை வழங்க தீர்மானித்தாக, அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கண்டி முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கத்தின் வருடாநாட நிகழ்வில் வைத்து அவர் இதனை, நேற்றுக் கூறியுள்ளார்.

Related posts

முசலி பிரதேச சபை தவிசாளருக்கான இரகசிய வாக்கெடுப்பு

wpengine

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

wpengine

ஆளுங் கட்சியின் தலைவராக ஏர்டோவான்

wpengine