பிரதான செய்திகள்

கைதியினை தப்பிக்க விட்ட மன்னார் பொலிஸ்! மூன்று பேர் பணி நீக்கம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச்சம்வத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், கைதுசெய்யப்பட்ட சந்தெகநபர் ஒருவர் சுகயீனம் காரணமாக, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரின், பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்றக் கைதியை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

இந்துகள்,கத்தோலிக்கர்கள் பிரிந்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்

wpengine

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி.!

Maash

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

Editor