Breaking
Mon. Nov 25th, 2024

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் பொது நிகழ்விற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் போக்குவரத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் முகமாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும், அரச பேருந்து சாரதிகளுக்கும் இடையில் உருவான முறுகல் நிலையை அடுத்து இணைந்த நேர அட்டவணை வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டது.

 

எனினும் தற்போது, வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தினை பொதுத்தேவைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இரண்டு வருடங்களாக இரவு பகலாக அமைக்கப்பட்டு மக்கள் பணத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பலரும் இது தொடர்பில் பல்வேறு விசனங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *